யுகபாரதி

கரகாட்டக்காரி

Posted by யுகபாரதி மேல் ஜூலை 31, 2009

கரகாட்டக்காரி

ஆடுகிறாள் ஆம்பலத்தில்
ஆதிசிவன் சிரிப்போடு
காலக் கயிறுகள்
சுழற்றுகிற பம்பரம் போல்

தலைக்கு மேலிருக்கும்
பித்தளைப் பூங்கரகம்
இடுப்புப் பாவாடையோ
பிழைப்பு ராட்டினம்

மேடையில்லாச் சேரிகளின்
மேல் நின்று ஆடுகிறாள்
கோவிலில்லாச் சாமிகளின்
கொடை நாளை கௌரவிக்க

வாணி ஓழுக ஓழுக
வந்து நிற்கும் பெருசுகளின்
கோணல் பார்வைக்குக்
கொடுக்கிறாள் சவுக்கடியை

நையாண்டி மேளங்கள்
நட்டென்று ஓலிஏழுப்ப
சலங்கை சிரிக்கிறது
சாவு வீட்டு முற்றத்தில்

வேர்வை வருவதற்குள்
விடைபெறும் பரதத்தை
வேர்வை வழிய வழிய
விரட்டுகிறாள் கோபத்துடன்

இஞ்சி இடையழகு
இங்குண்டு பாரெனக்
கொஞ்சி ஆழைக்கிறாள்
குடிகாரக் கூட்டத்தை

ஏங்கி அழுவதில்லை
இவளுடைய சிருங்காரம்
நாங்கள் ஒசத்தியென்று
நடிப்பதில்லை ஒருநாளும்

வெட்ட வெளி மீது
வெறியோடு ஆடுகிறாள்
பட்ட துயர் தீர
பசியோடும் ஆடுகிறாள்

அவிழுமா கொக்கியென
ஆடவர் பார்த்திருக்க
கிடைக்குமா பத்து ரூபாய்
கேட்கிறது இவள் ரவிக்கை.

(ஆனந்த  விகடனில் தொடராக வெளிவந்த “தெருவாசகம்” கவிதைத் தொகுப்பிலிருந்து)

Advertisements

4 பதில்கள் to “கரகாட்டக்காரி”

  1. pavithra said

    ஒரு அருமையான நாட்டுபுற கலை … மேல்தட்டு கலைகளை கொண்டாட பழகிய சமூகம் . உழைப்பாளி மக்களின் கலையை காம வடிகால் ஆக்கிய அவலம்.. கலைஞர்களின் வாழ்க்கை கண்ணீர் கதைகளை சொல்லும்..

    பவித்ரா

  2. //அவிழுமா கொக்கியென
    ஆடவர் பார்த்திருக்க
    கிடைக்குமா பத்து ரூபாய்
    கேட்கிறது இவள் ரவிக்கை//

    முகத்திலறையும் வார்த்தைகள். தெருவாசகம் தொகுப்பில் ஏற்கனவே படித்திருக்கிறேன். பைத்தியக்காரியின் கிழிந்த ஆடைக்குள்ளும் எலுமிச்சை நிறத்தைத் தேடும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    -ப்ரியமுடன்
    சேரல்

  3. அருமையான கவிதை. கூடவே அற்புதமாய் சந்தந்தோடு அமைந்திருக்கிறது.

  4. […] ஆண்டுகளுக்கு முன்பு யுகபாரதியின் ‘கரகாட்டக்காரி‘ கவிதை படித்து உருகிப்போனேன். அதே […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: