யுகபாரதி

அறியான் – திரைப்படப் பாடல்

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 4, 2009

பல்லவி

காகிதம் காற்றில் பறப்பதுபோல்
என் இதயம் காதலில்
பறக்கிறதே

பூமியில் மீண்டும் பிறப்பதுபோல்
கற்பனைகள்
பிறக்கிறதே

என் கனவுகளை
பார்க்கிறேன் உன் உருவினிலே
நேரிலே

உன் நினைவுகளை
கோர்க்கிறேன்

சரணம் 01

நீ வேறு நான் வேறு
அதுவா அழகு
நமை நாம்காணும் உறவே அழகு

நான் கேட்க நீ பேசும்
எதுவும் அழகு
நமை நாம்சேரும் அழகே அழகு

எதிர்பாராமல்
நீ பார்க்கும் நேரங்களில்
எனை நான்பார்க்கிறேன் செல்லமே

எனை நீ பார்ப்பதும்
உனை நான் பார்பதும்
மணநாள் பார்க்கும் வைபோகமே

சரணம் 02

என்னோடு நீ வேண்டும்
உலகை உணர
துணை நீதானே பயணம் தொடர

எப்போதும் நீ வேண்டும்
இதயம் மலர
எதை கேட்டாலும் தருவேன் குளிர

பல நூறாண்டு
தீர்ந்தாலும் தீராமலே
எனை பேரன்பில் நீராட்டவா

விழி மூடாமலே
விரல் நீங்காமலே
உனை தாய்போல தாலாட்டவா

(அறியான் என்னும் திரைப்படத்திற்காக எழுதிய இப்பாடலுடன் அப்படத்தின் பாடல் முழுதும் எழுதும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.இமையமைப்பாளர் புதிது.விக்ரம்வர்மன். இவர் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியதாக அறிமுகம் செய்துகொண்டார்.அவரிடம் புதிது செய்யும் வேகமும் துணிச்சலும் குறிப்பிடத்தக்க அம்சமாகத் தோன்றின.இயக்குநரும் புதிதுதான்,கார்த்திகேயன் என்பது அவருடைய பெயர்.அவருடைய பெயர் எல்லோருக்கும் தெரிந்ததாக மாற படம் வெளிவர வேண்டும்.)

Advertisements

ஒரு பதில் to “அறியான் – திரைப்படப் பாடல்”

  1. satkguna said

    உங்கள் கனவு மெய்பட வேண்டும்…
    உணர்வுகளில் தமிழ் வாழ வேண்டும்
    ஈழத்தில் இருந்து குணா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: