யுகபாரதி

சம்போ சிவ சம்போ

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 8, 2009

நாடோடிகள் திரைப்படத்திற்கு இயக்குநர்.சமுத்திரகனி என்னை பணித்த போது
நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற வாசகத்தை மட்டுமே பாடலின்
தொனியாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.கதையோ பாடலுக்கான சூழலோ
சொல்லாமல் பாடல் பொதுவாக நட்பைப் பற்றி அமைந்தால் போதும் என்றும்
அதே சமயம் நட்பின் துரோகத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் விதமாக
வலி பொருந்திய வார்த்தைகளால் சொல்லுங்கள் என்றார்.
பிறகு பாடலுக்கான மெட்டை இசைத்துக் காட்டினார்.மெட்டைக் கேட்டதுமே
வார்த்தைகளை இட்டு நிரப்பும் வாஞ்சை ஏற்பட்டது.காரணம்,சுந்தர்.சி.பாபுவின்
தனித்துவம்.

ஒரு இசையமைப்பாளனின் உணர்வை மிகச் சரியாக விளங்கிக்
கொண்டாலே பாடலை எளிதாக எழுதிவிட முடியும் என்று நம்பிகின்றவன் நான்.
ஆனால்,அந்தப் பாடலை திரையில் பார்க்கும் யார் ஒருவருக்கும் அதே உணர்வு
ஏற்படுத்தும் வகையில் எளிய சொற்கள் கொண்டு படைக்கும்போதே உரிய
வெற்றி பெறும்.

அப்படியொரு பாடலாக சம்போ சிவ சம்போ அமைந்திருப்பது மகிழ்ச்சி.என்னையும்
இசையையும் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு முறை கொண்டு சேர்த்த பெருமை
இயக்குநரையே சாரும்.உடனே பாடலுக்கான வரிகளை எழுதாமல் நாளைந்து நாள்
கழித்தே எழுத வேண்டும் என தீர்மானித்துக்கொண்டேன்.ஏனெனில், அவசரக்கோலத்தில்
எழுதி தவறிவிட்டால் பாடலும் மெட்டும் மட்டுமல்ல கதையே எடுபடாமல் போய்விடும்
என்ற அச்சமிருந்தது.இந்தப் பாடலே படத்தில் பல இடங்களில் பயன்படும் பாடலாக
வருவதால் பாட்டுக்காக கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள விரும்பினேன்.

என்னை நானே நிதானப்படுத்திக்கொண்டு பாடலை எழுத புகும்போது அரைமணி நேரத்தில்
பாடலை முடித்துவிட்டேன். நட்பின் முழு சரடும் வந்ததுபோல தோன்றிற்று.இயக்குநரிடம்
வரிகளை காட்டியதுமே அவர் முகத்தில்  எதிர்பார்த்தது அச்சரம் விலகாமல் வந்துவிட்டது
என்ற நிறைவைக் காண முடிந்தது.வரிகளைக் கதைக்குப் பொருந்தமாக தேர்ந்தெடுத்து என்னிடம்
வரிகளின் தொடர்ச்சியை சோதிக்க சொன்னார். ஒரு இயக்குநரின் முழு ஆளுமையும் அவர்
தேர்ந்தெடுக்கும் வரிகளில் இருந்து யூகிக்க முடியும்.

இயக்குநரின் ரசனை என் ரசனைக்கு மிக நெருக்கமாக இருந்தது. நான் ரசித்த வரிகளையே
அவரும் ரசித்து தேர்தெடுத்திருந்தார். பிறகே பாடலிக்கான சூழலை வெளிப்படுத்தினார்.
இதுவரை பாடலுக்கான சூழலை கேட்ட பிறகே எழுதியிருக்கிறேன்.ஆனால், சமுத்திரகனி
சற்றே வித்யாசமாக என்னை அனுகிய விதம் ரொம்பவே பிடித்தது.
சித்தம் போக்கு சிவன் போக்கு என்று திரியும் நண்பர்கள் காதலுக்காக செய்யும் தியாகமே கதை.
ஆனால், அந்த தியாகம் காதலர்களால் உதாசினப்படுத்தும் போது ஏற்படும் வலியே கதையின்
மூலவேர்.அதை சரியாக பாடல் வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.திரையரங்குகளில்
அந்தப் பாடலுக்கு தரும் கைத்தட்டு நட்புக்கானது.காதலுக்கானது.
தன்னை இழந்து தன் வாழ்வை இழந்து காதலுக்காகப் போராடும் நண்பர்கள், அந்தக் காதல் மனக்கசப்பில்
உடையும் போது தவிக்கும் தவிப்பே மொத்த வாழ்வையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

சமுத்திரகனி என் நண்பர் என்று நான் பெருமைப்படும் விதத்தில் நாடோடிகளை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்.
இந்த வெற்றி அவர் திறமைக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல.தமிழ்த் திரையுலகத்தின் இளைய பட்டாளத்திற்குக் கிடைத்த
வெற்றி.
காலம் சென்று கொண்டே இருக்கிறது.யாராலும் வெல்ல முடியாத அல்லது யார் கண்களும் காண முடியாத
அரூப சித்திரங்களோடு அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. காலத்தை வென்றதாக நாம் சில யுக புருஷர்களைச்
சொல்கிறோம். உண்மையில்,காலமே அவர்களை வென்றிருக்கிறது.
அவர்கள் காலத்தை வென்றதாக நாமே சொல்கிறோம்.
அவர்கள் காலத்தை வென்றிருந்தால் ஏன் காலமாகிப் போகிறார்கள்?

சம்போ சிவ சம்போ

பல்லவி

உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்

துடிக்கும் இதயம் கொளுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சரணம் 1

நீயென்ன நானுமென்ன
பேதங்கள் தேவையில்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை

சிரிக்கின்ற நேரம் மட்டும்
நட்பென்று தேங்கிடாதே
அழுகின்ற நேரம் கூட
நட்புண்டு நீங்கிடாதே

தோல்வியே என்றும் இல்லை
துணிந்தபின் பயமே இல்லை
வெற்றியே

சரணம் 2

ஏக்கங்கள் தீரும் மட்டும்
வாழ்வதா வாழ்க்கையாகும்?
ஆசைக்கு வாழும் வாழ்கை
ஆற்றிலே கோலமாகும்

பொய்வேடம் வாழ்வதில்லை
மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகம்
எந்நாளும் வாழும் வாழும்

சாத்திரம் நட்புக்கில்லை
ஆத்திரம் நட்புக்குண்டு
காட்டவே

Advertisements

4 பதில்கள் to “சம்போ சிவ சம்போ”

 1. மிகவும் உத்வேகம் தரக்கூடியதொரு இசையுடனான பாடல்.
  நல்ல வரிகள்.
  பகிர்வுக்கு நன்றி !

 2. பகிர்வுக்கு நன்றி கவிஞரே

 3. யுகபாரதி அண்ணா ,

  நாம் இருவரும் அமீரகத்தில் தமிழ்தேர் என்ற அமைப்பின் நிகழ்ச்சிக்கு தாங்கள் வந்திருந்த போது உங்களிடம்
  அறிமுகம் ஆனென்.என்னை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

  உங்கள் அன்புத் தம்பி,
  கவித்தோழன்

 4. balaji said

  Anna I LOVE THIS SONG , it’s give new power and energy to all friends and friendship ,am very proud to you as my anna ,

  yours one of brother BALAJI. . . . .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: