யுகபாரதி

மினி ஸ்கர்ட் நடிகை

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 9, 2009

மினி ஸ்கர்ட் நடிகையை
எனக்குப் பிடித்திருக்கிறது

அவள் ஆட்டத்தில் கிறங்கி
மெய்மறந்து கிடக்கலாம்

அவள் உந்திச் சுழியில்
கண்குவித்து மிரளலாம்

மார்பு கூந்தல் பிருஷ்டம்
பாதம் இடை உதடுகள்
எங்கும் தளும்பி வழிகிறது அழகு

என்போன்ற பலருக்கும்
அவள் உதவுகிறாள்

காதலிலோ தற்கொலையிலோ
அவள் விழாதிருந்தல்
அவளுக்காக என்னவும் செய்யலாம்

அவள் சாதாரணமானவளில்லை

வேண்டுமானால் பாருங்கள்
நாளை அவளுக்காக
நீங்கள் ஓட்டுப்போடுவீர்கள்

2.

போன வருடம்
இதே மாதிரி ஒரு நாளில்
தேநீர் குடித்துக் கொண்டிருக்கையில்தான்
கோப்பையில் ஈ விழுந்தது

எடுத்தெறிவதா
கோப்பையைக் கவிழ்ப்பதா என யோசித்து
அப்படியே வைத்திருந்தேன்

இம்முறையும் குழப்பம்

ஈ தேநீரில் விழுவது
இயற்கையானதுதான்
ஈக்கு தேநீரின் அவசியம்
புரிந்திருக்காது

ஈயாய் இருப்பதால்
தேநீரில் விழுகிறது
நாயாய் இருந்திருந்தால்
வேறு எதிலாவது விழுந்திருக்கும்

மனிதர்கள்
காதலில் விழுவது போலவும்
துறவிகள்
ஆலயங்களில் விழுவது போலவும்

Advertisements

4 பதில்கள் to “மினி ஸ்கர்ட் நடிகை”

 1. kartin said

  mini skirt வெகுவாய்க் கவர்ந்தது!!

 2. Jawahar said

  //அவள் உந்திச் சுழியில்
  கண்குவித்து மிரளலாம்//

  இந்த யுகத்துக்கு ஒரு பாரதிதான் என்று எண்ணியிருந்தேன். கலியுகத்துக்கு ஏற்ற பாரதி-யுவபாரதி நீங்கள். வாழ்த்துக்கள்.

  http://kgjawarlal.wordpress.com

 3. நாயாய் இருந்திருந்தால்
  வேறு எதிலாவது விழுந்திருக்கும்
  மனிதர்கள்
  காதலில் விழுவது போலவும்
  துறவிகள்
  ஆலயங்களில் விழுவது போலவும்

  “உடன்பாடில்லை” யுகபாரதி.

 4. இரண்டு கவிதைகளுக்குமே முத்தாய்ப்பான முடிவுகள். முடிவு என்று ஏன் சொல்ல வேண்டும்? முத்தாய்ப்பான உச்சகட்டம் 🙂

  -ப்ரியமுடன்
  சேரல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: