யுகபாரதி

இரண்டு லதாக்கள்

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 2, 2009

பிரேமலதா தன் காதலை
அவனிடம் சொல்லிடப் போகையில்
அவன் இன்னொருத்தியோடு
பேசிக்கொண்டிருந்தான்

பிரேமலதா துயரக்கதவை
தட்டத் தொடங்கிவிட்டாள்
தன்னை முந்திவிட்ட அப்பெண்ணை
சபிக்கவும் தவறவில்லை

இன்னொருத்தியோடு
நின்று கொண்டிருந்த அவனுக்கும்
பிரேமலதாவை பிடிக்காமலில்லை

புதிதாய் கிடைத்தவளை
பிரேமலதாவாக நினைத்து
தொடருகிறான் பிரியங்களை

காதலைச் சொல்லிவிட்ட ஒருத்தியை
பிரேமலதாவாகக் கருதுவது
அவனுக்கு சிரமமேற்படுத்தவில்லை

ஒருவனுக்கு பிரேமலதாவை
உவந்து ஸ்நேகிக்க முடியும்போது
ஏன் ஒரு பிரேமலதாவுக்கு
இன்னொரு பிரேமலதாவை
பிடிப்பதில்லை?

Advertisements

3 பதில்கள் to “இரண்டு லதாக்கள்”

  1. karthick prabhu said

    ரசிக்கும் படியாக இருக்கிறது

    உங்கள் பேட்டியை சமீபத்தில் பார்த்தேன் வாழ்த்துக்கள்

  2. அது பெண்களுக்கே உரித்தானது

  3. soundr said

    பிரேமலதா மட்டுமல்ல பிரபுவும் அப்படிதான்.
    கிடைத்த‌தை விரும்புவோர்க்கும்
    விரும்பியதே கிடைக்க வேண்டும்
    என எண்ணுவோர்க்கும் உள்ள வேருபாடு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: