யுகபாரதி

உனக்கு

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 10, 2009

தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.

Advertisements

7 பதில்கள் to “உனக்கு”

 1. //வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.//
  முடித்தவிதம் அருமை.. 🙂

  கவிதை அழகு.. 🙂

 2. //காதலில் விழுந்தேனில்லை
  எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
  பெயரையும் நீயே இடலாம்//

  //வேலைக்குக் கிளம்பும்போது
  அழுவதைத் தவிர்க்க வேண்டும்
  வெறுங்கையோடு திரும்பி வந்தால்
  வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்//

  சந்தத்தோடு சொல்கிற சங்கதி என்னவோ செய்துவிட்டது

  -ப்ரியமுடன்
  சேரல்

 3. ‘உனக்கு’ என்றே ஒரு கவிதை எழுதிவிட்டு, ‘எழுதிடும் பாட்டுக்குள்ளே
  எங்கேனும் உன்னை வைப்பேன்’ னு சொல்லியிருக்கீங்க. இது நல்லா இருக்கு. 🙂

 4. kathirvel said

  i am a great fan of you…
  going superb yaar..
  my wishes

 5. Karthick said

  arumaiyaana kavidha thozhalre…

 6. selva said

  you great…each and every word disturbing somthing in.
  one example i have to say.

  ……
  சந்தேகம் துளியும் இல்லை
  அந்தரங்கம் உனக்கும் உண்டு

  You are the man writting the real fact……..

  alam’s

 7. kapilashiwaa said

  //தேவதை தேவையில்லை
  தெளிந்த நல் வதனம் போதும்
  வைர நகையெதற்கு?
  வழித்துணையாதல் இன்பம்//

  நல்ல ஆரம்பம் சார். அதேபோல்

  //வேலைக்குக் கிளம்பும்போது
  அழுவதைத் தவிர்க்க வேண்டும்
  வெறுங்கையோடு திரும்பி வந்தால்
  வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.//

  நன்றாகவே முடித்திருக்கிறீர்கள்.
  பெரும்பான்மையான ஆண்களின் எதிர்ப்பார்ப்பை எவ்வளவு எளிதான வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சார். உங்கள் அனைத்து முயர்ச்சிகளும் வெற்றி அடைய..
  http://www.kapilashiwaa.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: