யுகபாரதி

எங்க ஊரு பாட்டுக்காரன்

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 19, 2009

திரைப்படப் பாடல் எழுதுவதற்கு எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணனும் கவிஞர்.மனுஷ்யபுத்திரனும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான செய்தி.இந்த இரண்டுபேரில் வைரமுத்துவுக்குப் பிறகு சிறந்த பாடலாசிரியாக வரும் வாய்ப்பு மனுஷ்யபுத்திரனுக்கு இருப்பதாக எழுத்தாளர். சாருநிவேதிதா கூறியிருக்கிறார்.எஸ்.ராமகிருஷ்ணனுக்கும்  அந்த வாய்ப்பு இருக்கிறதுதான். ஆனால்,அதைச் சாருவால் எழுதவோ வெளிப்படுத்தவோ இயலாது. ஒரே பாட்டில் முப்பது ஆண்டுகாலமாக எழுதிவரும் வைரமுத்துவை காட்டிலும் சிறந்தவராக மனுஷ்யபுத்திரன் தோன்றுவதற்கு என்ன காரணம் என்பதை உயிர்மெய் பதிப்பக வாசகர்கள் நிச்சயம் உணருவார்கள்.

திரைப்படப் பாடல் எழுதுவதில் உள்ள சிக்கலையும் அதன் நுட்பங்களை உணர்ந்துகொள்வதில் உள்ள தடையையும் நம்மூர் சோகால்ட்டு எழுத்தாளர்கள் புரிந்துகொள்வது கடினம்.அதுவும்,மொழிக்கட்டமைப்பைக் கொண்டு இயங்கும் திரைப்பாடல்கள் தன்னிச்சையான எந்த கருத்தோடும் அல்லது கதாபாத்திரத்தோடும் இணைந்து வினைபுரிவதில்லை. கேட்பவரின் ரசனை மட்டமும் எழுதுகிறவரின் ரசனை மட்டமும் வெவ்வேறு.தமிழ் இலக்கண அறிவை கொண்டிராத ஒருவரால் சிறந்த பாடலை உள்வாங்கவோ விமர்சிக்கவோ இயலாது என்பதை அதன் ஊடே பத்து ஆண்டுகளுக்கு மேல் பயணிக்கும் என்னால் கூற முடியும்.  பார்வைக்கு எளிதுபோல் தோன்றினாலும் பயிற்சி இல்லாமல் திரைப்பாடலைக் கையாள முடியாது.மேற்கோள் காட்டி கருத்து கூறும் மிகச் சாதாரண வரிகளைக் கூட மெட்டு அனுமதிக்காமல் எழுத இயலாது.

பாபநாசம் சிவனிலிருந்து இன்று எழுதுகிற ஆரம்பப் பாடலாசிரியர் வரை ஒவ்வொருவரும் தனித்தனி ஆளுமையாகப் பார்க்கப்பட வேண்டும்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கண்ணதாசன்,வைரமுத்து என்று பட்டியல் தயாரித்து அவர்களைத் தாண்டி வேறு எவருமே போதிய கவனிப்புப் பெறவில்லை என்பது மோசடி. ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழியின் அழகுகளை உள்வாங்கிக்கொண்டு யாராவது ஒருவர் முன்நிற்கிறார்.அந்த வரிசையில் உடுமலையார், ஆலங்குடி.சோமு, கு.மா.பாலசுப்ரமணியம், கவி.கா.மு.செரிப்,  புலவர்.புலமைப்பித்தன், நா.காமராசன் ஆகியோர் தவிர்க்க முடியாதவர்கள் என்பதைச் சாரு போன்றோர் உணர வேண்டும்.

நெடிய ஆய்வை மேற்கொள்ளாமல் கருத்து கூறும் யார் ஒருவரும் திரைப்பாடலின் உண்மையான பங்களிப்பை உணராதவர்கள் என்றே
கருதவேண்டும்.யாரையாவது திருப்திபடுத்த எழுதும் இம்மாதிரியான அபிப்ராயங்கள் காலத்தின் கண்களைக் குருடாக்குவதற்கு ஒப்பானதே.
எழுத வருவதற்கு முன்பு நமக்கு அந்தத்துறை குறித்த குறைந்தபட்ச அறிவாவது இருக்கிறதா என சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது. இசையறிவை வைத்துக்கொண்டு மட்டும் சிறந்த பாடலைத் தீர்மானித்துவிட முடியாது.ஏனெனில்,தமிழ்த் திரைப்படப்பாடல்கள் என்பது இசையைத் தாண்டி வரிகளால் மட்டுமே கவனம் பெற்றிருக்கின்றன.வரிகள்,சமூக அரசியலோடு சம்பந்தமுடையவை என்பதும் அதன்வழியேதான் ஒருபாடல் அடையாளப்படுகிறது என்பதும் முக்கியமானது.

எது எப்படியானாலும் யாருக்கு என்ன இடம் என்பதை காலமும் பின்வரும் தலைமுறையும் தீர்மானிக்கும் என்பதால் தாம்பள வடிவ ஜால்ராக்களைப் பொறுத்தருள்வோம்.

Advertisements

8 பதில்கள் to “எங்க ஊரு பாட்டுக்காரன்”

 1. நல்ல மறுமொழி

 2. பிகில் மாணிக்கம் said

  சரியாக சொன்னீர்கள். சாரு அவர்கள் எழுதுவது முழுதும் அவருக்கு வேண்டியவர்கலை திருப்தி படுத்துவதற்கே. வேறு நோக்கம் ஒன்றும் கிடையாது அவருக்கு. மனுஸ்யபுத்திரன் ராயல்டி கொடுக்கிறார், அவரது பத்திரிக்கையில் எழுத வாய்ப்பு கொடுக்கிறார். அதனால் அவரை புகழ்கிறார். கமலையும் அவர் பெண்ணையும் புகழும் காரணம், சினிமா சான்சுதான். தன்னுடைய சமக்கால எழுத்தாளர்கள் பலர் சினிமாவில் பேரும் பணமும் சம்பாதிக்கும்பொழுது தன்னால் அது முடியவில்லயே என்ற ஆதங்கத்தினால்தான் அப்படி எழுதுகிறார். முன்பு சசிக்குமாரைப் புகழ்ந்ததும் அதனால்தான். அவர் படத்துக்கு இவர் ஹீரோ ஆகவேண்டுமாம். என்ன கொடுமை சரவணன்!!!!

 3. Guna said

  நல்ல ஒரு பதிவு கவிஞரே!

 4. ravi said

  சரியாக சொன்னீர்

 5. சேர்ந்துகிட்டாங்களா ரெண்டு பேரும்!

  போன மாசம் அடிச்சிகிட்டாங்களே!?

 6. soundr said

  you have got much more productive works to do, than making blogposts on silly, petty issues.

 7. ரோஸாவசந்த் said

  நீங்கள் சாரு எழுதியதை பொருட்படுத்தி எழுதியுள்ளதே அவருக்கு வெற்றிதான். நாளை உங்களை திரித்து மேற்கோள் காட்டி தன்னை பலரும் தாக்குவதாக தன் பதிவில் எழுதிக்கொள்வார். திரைப்பாடல் மட்டுமின்றி, சாரு இதுவரை எழுதியுள்ள ஆழ்ந்த பல விஷயங்களை பற்றி மிக மேலோட்டமான அறிவு மட்டுமே கொண்டவர் என்பது பலருக்கு தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் எழுதுவதை பொருட்படுத்துவதில்லை. ஆனால் இன்றய இணைய யுகத்தில் அவருடைய சரக்கு விற்க பெரிய மார்கெட் இருந்துகொண்டே இருக்கிறது. மேலும் மேலோட்டமான அறிவை வைத்தே கலாகௌமுதி போன்ற பத்திரிகைகளில் அவரால் தொடர்ந்து பல விஷயங்களை எழுத முடிவதே அவரது வெற்றி. உங்களை போன்றவர்கள் அவர் சொன்னதை பொருட்படுத்துவது கூட இந்த வெற்றிக்கு ஒரு காரணம்.

 8. vennila said

  Sariyaha sonnar Bikil Manikkam
  Sarumathikku antha athankam athikam undu.
  Vennila…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: