யுகபாரதி

பவானி – திரைப்பாடல்

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 19, 2009

பல்லவி

ஆடுபுலி ஆட்டந்தான்
அரசியலாச்சி – இங்க
ஆளவெட்டும் காரியந்தான்
தினசரி காட்சி

கேடுகெட்ட கூட்டத்தால
வாடுது ஊரு – இத
கேள்வி கேட்க யாருமில்ல
பாருங்க சாரு

குள்ளநரி கும்பலோட
கொட்டம் அடங்குமா – நம்ம
புள்ளகுட்டி கண்ணீரோட
செத்து மடியுமா?

சரணம் 01

மூணுவேள  சோத்துக்காக
ஓடி ஒழக்கிறோம் – நாம
முப்பதுநாளும் வேர்வையில
வாடிக் கெடக்கிறோம்

ஓடி ஓடி வேல செஞ்சும்
வாழ்க்க மாறல – நாம
ஊமையாட்டம் இருப்பதால
சோகம் போகல

வீதியெல்லம் கோயில்கட்டி
என்ன புண்ணியம் – நம்ம
வேதனையும் நீங்கலயே
பூச பண்ணியும்?

நல்லவங்க வாழ்ந்தபூமி
ஆனது தீட்டு – இத
நீயும் நானும் புரிஞ்சுக்கிட்டா
கெடச்சிடும் ரூட்டு

சரணம் 02

ஓட்டுப்போட மட்டுந்தானே
நாம இருக்கிறோம் – இந்த
ஊசலாடும் வாழ்க்கையில
எங்க சிரிக்கிறோம்?

காலமெல்லாம் மாறுமின்னு
கதை அளந்தாங்க – நாம
கவலையில சாகும்போது
தலவிதின்னாங்க

காசுக்காக கூட்டணியும்
மாறுது ஜோரா – ஈன
பதவிக்காக ஏழ ரெத்தம்
ஓடுது ஆறா

ராத்திரியில் விடுதலைய
வாங்கியதேனோ – இன்னும்
விடியலேன்னு அழுது அழுது
தேம்பிடத்தானோ?

(பவானி திரைப்படத்துக்காக எழுதப்பட்ட இந்த பாடல்
சமகால அரசியலை கேள்விக்குள்ளாக்கும் அங்கதப்
பதிவு.இம்மாதிரி பாடல் எழுதுவதில் எனக்கு ஆர்வம்
அதிகம்.ஆனால்,வாய்ப்புகள் கிட்டுவதில்லை.கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்த உதவிய இயக்குநர்.கிச்சாவிற்கு
நன்றியும் பாராட்டும்)

Advertisements

2 பதில்கள் to “பவானி – திரைப்பாடல்”

  1. எம்ஜியார் புரட்சிப்பாடல் மாதிரி இருக்கு.

    மூணுவேல சோத்துக்காக = மூணுவேளெ
    ராத்தியிரில் விடுதலைய = ராத்திரியில்

  2. ஒவ்வொரு இடுகையையும் படித்துக்கொண்டே தான் வருகிறேன். அரசியலில் கடமை கண்ணியம் கட்டுபாடு என்று வார்த்தைகளால் சொல்லிக்கொண்டுருப்பதை நீங்கள் வாழ்க்கையாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். எதிர்பார்ப்பு இல்லை. ஏங்க வைக்கும் வீங்க வைக்கும் விமர்சனம் இல்லை. மொத்தத்தில் என் கடன் பணி செய்து கிடப்பதே. அது பதிவு படைப்பாக இருந்தாலும் சரி, படைக்கும் திரைபாடலாக இருந்தாலும் சரி என்று வாழ்ந்து கொண்டுருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: