யுகபாரதி

மைனா திரைப்படப்பாடல்

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 20, 2009

பல்லவி

ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு
ஜிலுஜிலுக்கிற ரவிக்கப் போட்டு
எங்க நீயும் கிளம்பிப் போற
சொல்லு வேகமா – நானும்
தொணக்கி வாரேன் பேசிக்கிட்டே
கண்ணே போவமா?

ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு
ஜிலுஜிலுக்கிற ரவிக்கப் போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன்
சும்மா வெலகுங்க – நீங்க
எப்போதுமே தொணக்கி வேணாம்
எட்டி நகருங்க

நாடு ரொம்ப கெட்டுப்போச்சு
நல்லதெல்லாம் செத்துப்போச்சு
கூட வந்து இருக்குறேனே
கட்டுக்காவலா – நீயும்
கூடாதுன்னு சொல்லாதேடி
குட்டி கோகிலா

சரணம்01

ராயந்தூரு மூணு மையிலு
நாங்குனேரி நூறு மையிலு
சாயங்கால வேளையில
சேல எதுக்கடி – சேவ
கூவும்போது உடுத்திக்கலாம்
கொஞ்சம் வெலக்கடி

சீராளூரு அஞ்சு மையிலு
சிதம்பரமோ எம்பது மையிலு
வேலூருல ஏற்கனவே
கம்பி எண்ணின – அந்த
வெக்கக்கேட்ட மறந்துப்புட்டு
இப்ப துள்ளுன

செங்கிப்பட்டி ஒம்பது மையிலு
சிங்கப்பூரு எத்தன மையிலு
அத்தன ஊரும் சுத்திப் பாத்த
ஆளு யாரடி – உன்ன
ஆராஞ்சிநான் பாக்கவேணும்
ஜோடி சேரடி

சரணம்02

பூதலூரு ஏழு மையிலு
பூண்டிக்கோயில் நாலு மையிலு
காதலோட ஒன்ன நானும்
கட்டிப் புடிக்கவா – இல்ல
காவி வேட்டி கட்டிக்கிட்டு
பட்ட அடிக்கவா

கும்பகோணம் ஆறு மையிலு
குளித்தலையோ நாலு மையிலு
ஊருக்கூரு ஒதபட்டும் நீ
இன்னும் திருந்தல – ஒங்க
அப்பா அம்மா கட்டி வச்ச
பொண்னும் மதிக்கல

மாயவரம் எட்டு மையிலு
மன்னார்குடி பத்து மையிலு
எறைக்காத கேணியில
நீரு ஏதடி – என்ன
ஏத்துக்கிட்டு இஷ்டம்போல
தூரு வாரடி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: