யுகபாரதி

வானம் பார்த்த பூமி

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 23, 2009

பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்..

அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்..

வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை…

**

உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!

நீயோ
அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!

**

உன் முந்தானையால்
தலை துவட்டி விடுவாய்
என்பதற்காகவே
குடை மறந்து
வந்த மழைநாளில்
ஜீன்ஸும்
டிஷர்டுமாய்
நின்றிருந்த உன்னை
என்ன சொல்லி
திட்டுவது

**

கவிதையில்
எல்லாம் சொல்லி
விட முடியாது
உன் அழகை!

எழுதும்போதே
கூடிக்கொண்டிருக்கும்
அழகு
உனக்கே உண்டானது!

Advertisements

7 பதில்கள் to “வானம் பார்த்த பூமி”

 1. பழங்கஞ்சியும்
  பயத்தந் துவையலும்
  ஏர் உழும் மாமனுக்கு
  எடுத்துப் போவாள்..

  அவளுக்குப் பிடிக்குமென்று
  ஈச்சம் பழங்களை
  துண்டில் மூடித் தருவான்
  அவன்..//

  முழுக்கவிதையும் மிக நேர்த்தியாக இருக்கிறது.பாராட்டுக்கள்.

 2. uumm said

  very..very nice.

 3. கவிதை மிக அருமை வாழ்த்துக்கள்

 4. soundr said

  இலக்கியத்தில்
  தலைவனை காணாது
  பசலை நோய் கொண்ட‌
  தலைவியின் கைகளை விட்டு
  தானே விலகியதாம் வளையல்கள்

  இங்கே
  வளையல்கள் அணிய மெலிகின்றன‌
  தலைவியின் கைகள்
  தலைவனின் காதல் கண்டு

  வானம் பார்த்த பூமியில்
  ஆஹா…
  புது “மண் மனம்”
  “புது மண்” மனம்

 5. 🙂
  நல்லாயிருக்குங்க!

 6. vennila said

  “Kavithayil ellam solli vida mudiyathu un alagai”
  Arumaiyana varikal
  Vennila…

 7. அனைத்துமே அருமை சார்,,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: