யுகபாரதி

சொல்வதெனில்

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 1, 2009

1

மிகப்பல வருடங்களுக்கு
முன்பாக
மிகமிக மலிவாயிருந்தது
அரசாங்கம்
நாம் உயர்வாயிருந்தோம்
மும்மழை தவறிய போதும்
முப்போக மகசூல் உண்டு

வீட்டுக் கொல்லையிலேயே
காய்கனிகள் கிடைத்தன
வீடற்றவர்கள்
மடப்பள்ளிகளிலாவது
தங்கிக் கொண்டனர்

இத்தனை சிரமமானதாக
ஒரு நாள் கழியவில்லை
கட்டைவண்டி என்றாலும்
ஓரிடத்திலிருந்து வேறிடம்
பயமின்றி போகமுடிந்தது

இன்னும் சொல்வதெனில்
அவ்வப்போதாவது
சிரித்துக் கொண்டிருந்தோம்

2

எந்த குறுநில மன்னனும்
வரிப்பணத்துக்காக
மக்களிடம் கையேந்தி
நிற்கவில்லை

ஒரு கோழையைப்போல்
தன் சுமையை
அப்பாவிகள் மீது
தலை மாற்றவில்லை

திடீரென்று அதிகாலைச்
செய்திகளில்
பொருள்களின் விலைகள்
ஏற்றப்படவில்லை

ஆள்கிறவன்
யாரென்றாவது
அறிய முடிந்தது

பினாமிப் பெயர்களில்
சொத்து வைத்திருந்தாலும்
ஆட்சிப் பீடத்தில்
அமர்த்தவில்லை
பொம்மைகளை

வெளிப்படையாகச்
சொல்வதெனில்
அரசனிடம் வாள் இருந்தது
சாட்டையில்லை

Advertisements

5 பதில்கள் to “சொல்வதெனில்”

 1. bhaskar said

  யுகபாரதி,

  இந்தக் கவிதையை விட உங்கள் பழைய கவிதைகளே கொஞ்சம் மனத்திற்கு நெருக்கமானவையாக இருக்கிறது.

  ஆனால் எது உண்மை யுகபாரதி? காஞ்சிபுரத்தில் ஆள்பவர்கள் முன் பாடியதா? அல்லது இதுவா?

  • யுகபாரதி said

   பொம்மை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த கால கட்டத்தில்
   எழுதப்பட்ட கவிதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 2. vennila said

  Nammai arasaratchikku alaithu centru ankeye iruthiramattoma entru ninaikka vaitha ninaivukal.
  Vennila…

 3. “இன்னும் சொல்வதெனில்
  அவ்வப்போதாவது
  சிரித்துக் கொண்டிருந்தோம் ”

  அருமையான வரிகள்!

 4. //அரசனிடம் வாள் இருந்தது
  சாட்டையில்லை//

  கலக்கல் சார்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: