யுகபாரதி

எதிர் வீடு

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 7, 2009

விருப்பம் போல் ஆணியடிக்க
விடிய விடிய விளக்கெரிக்க
விருந்தினரை உபசரிக்க
முடியாத வாடகை வீட்டில்
வசிக்கலாம்,
வாழமுடியாது

*

கூட்டிப் பெருக்க
கொண்டாடிச் சிரிக்க
நீட்டிப்படுக்க நிம்மதி சுகிக்க
கேட்கும் பக்தனுக்கு
இல்லை ஒரு வீடு
அப்பன் முருகனுக்கோ
ஆறு படை வீடு

**

அண்ணாந்து வியக்க
அம்மா வீடு

மல்லாந்து கிடக்க
மாமியார் வீடு

நல்ல வீடு
ரெண்டிருந்தும்
சின்ன வீட்டுக்கேங்கி
செத்துத் தொலைவான்
லங்கேஸ்வரன்

***

நகை விற்று நிலம் விற்று
நடுநடுவே கடன் பெற்று
போய்ச் சேரும் புது வீடு
புரிய வைக்கும்
நிம்மதியிழக்க எளிய வழி
வீடு கட்டுவது

****

ஓரங்கிழிந்த பாய்
காரைபெயர்ந்த சுவர்
ஒட்டடை படிந்த ஜன்னல்
ஓசை எழுப்பும் மின் விசிறி
கலைந்த தலையணை
கழுவாத பாத்திரம்
என்றாலும் என் வீடு இனிது
ஏனெனில்,
எதிர் வீடு உனது

Advertisements

2 பதில்கள் to “எதிர் வீடு”

  1. ambika said

    very nice.

  2. vennila said

    Chinna veettukku engubavar eppothume setthuthan povar ullatthal.
    Vennila…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: