யுகபாரதி

அறியான் – திரைப்படப் பாடல் 2

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 5, 2009

பல்லவி

கடவுள் பார்ப்பதில்லை – அவர்
எதையும் கேட்பதில்லை – கேள்
அதனால் தாய் தோன்றினாள்

புனிதம் வேறு இல்லை – அட
அவள் போல் வேதமில்லை – பூ
உலகை தாய்க் காட்டினாள்

தோழிபோல துணையிருப்பாள்
மனதினிலே சுமந்திருப்பாள்
சுவாசக் காற்றைத் தருவாள்

சரணம் 01

உயர தினம் உயர
அவள் உறுதியை வழங்கிடும் உருவமடா
நிமிர தலை நிமிர
அவள் தகுதியை வளர்த்திடும் கருணையடா

சோர்ந்திடாமல் துணிவைத் தரும்
அவள் தூய்மையான பிறவியடா

பூமியின் அதிசியம் அவளெனவே
கால்களின் விழுந்து நீ தினம்
பூஜைகள் புரிவது பெருமையடா

சரணம் 02

பகலில் வரும் பகலில்
அவள் ஒளிதர உதித்திடும் விடியலடா
விழியில் இரு விழியில்
அவள் அருள்தரும் அழகிய வடிவமடா

தோல்வியாவும் தொலைந்துவிட
அவள் தோள்கள் தாங்கி நடக்குமடா

ஆயிரம் உறவுகள் உடன் வரலாம்
ஆயினும் நிரந்தரம் எது
தாய் மகன் உறவென உணர்ந்திடடா

Advertisements

ஒரு பதில் to “அறியான் – திரைப்படப் பாடல் 2”

  1. அம்மா … கண்ணேதிரே இருக்கும் போது சிலர் உண‌ர்வதில்லை,
    தங்களின் இந்த பாடல் … உணரவைக்கும்… அம்மாவை உயர்வாய் வைக்கும்.

    மிக நல்லாயிருக்கு…பாராட்டுக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: