யுகபாரதி

பிறகெதற்கு இந்த பிரியம்?

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 23, 2009

*

கோபித்துக்கொள்ள
ஒருவரும் இல்லாததைப்போல
துக்கம் வேறில்லை

கோபித்துக் கொள்ள
தெரியாத பட்சத்தில்
உங்கள் அன்பை வெளிப்படுத்த
தவறுகிறீர்கள் என்று அர்த்தம்

கோபம் தவறுகளின்
எதிர்வினையல்ல
பிரியத்தின் கூவல்

கோபமே படாதவர்
சந்தேகத்துக்குரிய நபர்
கோபம் முறுக்குறும் தருணங்களில்
காதலின் பரிபூரண வாசத்தை
யாரும் உணரலாம்

சிலம்பின் கோபம்
பத்தினியின் காதலல்லாது
வேறென்ன

கோபப்படலாம்
கோபம்தான் நம்மீது
படக்கூடாது

*

என்ன செய்வது உன்
பிரியத்தை வைத்துக்கொண்டு ?

கால் கிலோ கொத்தவரங்கா
வாங்க ஏலாது

ஒரு பற்பசையாவது எனில்
அதற்கும் வழியில்லை

நாலு முழம் பூ
ரெண்டு பிஸ்கட்
பாதிக்கோப்பை தேநீர்
அதையும் இதனால் முடியாது
சாத்தியமாக்க

பிறகெதற்கு இந்த பிரியம்?
இத்தனையும் கிடைக்காதென்று
சொல்லிக்கொள்ள.

Advertisements

6 பதில்கள் to “பிறகெதற்கு இந்த பிரியம்?”

 1. aruna said

  ரொம்ப அருமை! பூங்கொத்து!

 2. uumm said

  very very nice

 3. hideyoshi said

  how can you think such kind of wonderful words.really superb

 4. வாழ்வின் தத்துவங்களை கவிதைகளால் அறிவிப்பதில் கவிஞனும் பிரம்மனாகி விடுகிறான்.. காலப் போக்கில் அந்த படைப்பு எட்டி மனிதரிடம் சேர்ந்து; படைத்தவனை கவிஞனென கர்ஜிப்பதில் பெருமை கொள்ளும் எழுத்து சக்தி உங்கள் கவிதைகளில் தெறிக்கிறது. வாழ்த்துக்கள்!

  மிக அற்புதமான கவிதை! தங்களின் படைப்பிற்கான தருணத்திற்கு நாங்களும் நன்றி கூற கடமை பட்டுள்ளோம் கவிஞரே! மிக்க நன்றி யுகா!

 5. karthick said

  Vazhga thozhalre!!! arumaiyaana varthai thoguppu….

  Karthick

 6. அருமை…!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: