யுகபாரதி

ரேனிகுண்டா – திரைப்படப் பாடல்

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 24, 2009

படம்: ரேனிகுண்டா
இயக்கம்: ஆர்.பன்னீர் செல்வம்
இசை : கணேஷ்ராகவேந்திரா
பாடல் : யுகபாரதி

பல்லவி

விழிகளிலே விழிகளிலே
புதிய பூ பூத்ததே
விடுகதையாய் தொடர்ந்தகதை
விடியலைப் பார்த்தே

அழகான உலகினில் நாளும்
அணிந்தோமே பலவித வேடம்
அதுயாவும் கலைகிற நேரம்
படித்தோமே புதுபுதுப் பாடம்

இனிவரும் கிழமைகள்
திருவிழாக் கோலமே
மனதிலே தொடருமே
அடைமழைக் காலமே

சரணம் 01

தாவித்தாவி வருகிற அலையை
காதலோடு கரைகளும் தழுவும்
உறவை மனது சேரும் போது
விலகிடும் இருளே

உயிர் கொண்டோமே
உறவினில் கலந்திட
அதில் உண்டாகும்
இனிமைகள் தொடர்ந்திட

இனி உன் தூண்டிலில்
விண்மீன்களும் விழுமே கொண்டாடிடு

சரணம் 02

ஆசையோடு தடவிடும் கையில்
யானை கூட அடங்கிடும் நொடியில்
இதயம் இதனை யேந்திக் கொண்டால்
பெருகிடும் சுகமே

பிழை எப்போது
உலகினில் பிறந்திடும்?
கரம் பற்றாத
நொடியினில் வளர்ந்திடும்

துளி கண்ணீரிலே
கண்ணீரிலே அடடா சந்தோசமே

(வாழ்வை சோகத்தோடு எதிர்கொள்ளும் ஒரு பரத்தையின் நம்பிக்கை வரிகள்.ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் தொலைகாட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பும் என் சமீபத்திய திரைப்பாடல்.இயக்குநரும் இசையமைப்பாளரும் என்னை ஊக்கிய தருணத்தை நன்றியோடு
நினைத்துப்பார்க்கிறேன்)

Advertisements

2 பதில்கள் to “ரேனிகுண்டா – திரைப்படப் பாடல்”

 1. nanthakumaran said

  really i am enjoying always this song in afghanistan gills, yaga keep it up ,well done ya

 2. பலே யுகபாரதி ! பலே..!
  எளிமையான வார்த்தை பிரயோகம் .
  நயமான கற்பனை .
  கருத்தை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருந்தால்
  இன்னும் நன்றாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: