யுகபாரதி

துணை நடிகை

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 1, 2010

அவ்வப்போது செய்திகளில்
அழகியாகி விடுகிறவள்
அவமானம் பொறுக்காமல்
அழுதுவிழி கருகுபவள்

குத்துகின்ற ஆசைகளை
கொஞ்சம்போல சிந்துபவள்
செத்தொழிய மாட்டாமல்
சிறுகச்சிறுக பிந்துபவள்

தங்கையாய் இவள் நடித்தால்
கற்பழிப்பு காட்சி வரும்
வில்லன் விரட்டுகையில்
விழவேண்டும் முட்புதரில்

சிணுங்கும் நாயகியின்
சிறப்புகளை ஓதுவதற்கு
போகவேண்டும் நடிகனிடம்
பொறுப்பு மிக்க தோழியாக

இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கின்றாள்
திரைப்படத்தில் பலவாறு

பந்தயக் குதிரையாகும்
பாக்கியத்தை விட்டதனால்
சந்தடி ஏதுமின்றி
சருகாக உதிருகிறாள்

தரமான தவறுகளே
வருமானம் என்றாக
பொழுதெல்லாம் பூசுகிறாள்
கலையாத அரிதாரம்

இதற்குத்தான் ஆடுகிறேன்
என்பதுபோல் இடையாடும்
மறைப்பதற்குத் துணியிருந்து
ரசிகமனம் களவாடும்

வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற கேமிராவில்
தெரியாது இவள்பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்.

Advertisements

5 பதில்கள் to “துணை நடிகை”

 1. வயிற்றுக்கு மிகநெருங்கி
  வருகின்ற கேமிராவில்
  தெரியாது இவள்பசியும்
  தெய்வத்தின் வஞ்சகமும்.

  கடைசி பஞ் வரிகள் அருமை

 2. viji said

  ஒவ்வொரு முறையும் திரையில் தெரியும் பிம்பங்களை பார்க்கும்போதும் நினைப்பேன்……

  நன்றாக இருக்கிறது……

 3. karthick said

  Nitharsanamaana unmai thozhare!!!

  Karthick

 4. என்றும் கலைக்காத அரிதாரம். உலகமே நாடகமாகிவிடுகிறது இவர்களுக்கு.
  உங்கள் புரிதல் வெகுவாகப் பாதிக்கிறது மனதை.

 5. இதை ஏற்கனவே விகடனில் படித்து..என் வலைப்பூவில் எழுதியுள்ளேன்
  .pl visit
  http://tvrk.blogspot.com/2009/04/10-4-09.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: