யுகபாரதி

பஞ்ச தந்திரக் கவிதைகள்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 1, 2010

ஒன்று

தந்திரம் நிரம்பிய நரி
தனது கூட்டணியினரோடு
பேசிக் கொண்டிருந்தது.

எதிர்க் கட்சிகளின்
அதீத மக்கள் பணியை
எப்படி முறியடிப்பதென

எதற்கெடுத்தாலும்
அறிக்கை தருவதன் மூலம்
ஓரளவு சமாளிக்கலாம்

கடுமையான வெயிலுக்கு
காரணம் இவர்களென்று
கருத்து பரப்பலாம்

வித விதமான
விவாதம் குறித்து
எதிர்க்கட்சி நரிகளிடம்
கருத்துக் கேட்க
அவை சொல்லின
‘தேர்தல் வரப் போகிறது’

இரண்டு

பேசுதலே
பெரிதென்றிருக்கும்
தவளைகள்
தமக்குள் அடித்துக் கொண்டன
செம்மொழியானதற்கு
யார் காரணமென்று…

மொழியே காரணமென்று
எதிர்க்குரல் கொடுத்தன
முதலைகள்

வலுத்தது சண்டை
கக்கடைசியில்
செம்மொழியின் சிறப்பு
கெட்ட வார்த்தைகளில்
வெளிப்படலாயிற்று

போக்கத்த பிரஜைகளோ
புலம்பத் தொடங்கினர்

குளம்வற்றும் வரைதான்
தவளைக் குச்சல்
கூட்டணி இருக்கும் மட்டும்
கொடி பிடிக்கும்
முதலைகளின் மொழிப்பற்று

பசிக்கிறது எனச்சொல்ல
செம்மொழியானாலென்ன?
கம்பளியானாலென்ன?

மூன்று

நதிகளை
இணைப்பதொன்றே
தீர்வென்றன ஒட்டகங்கள்…

தாளாத தாகத்தில்
செத்தொழிதல் பொறுக்காமல்

சூழல் கெடுமே
சொல்?

இதை விடவும் கெடுவதற்கு
இருக்கிறதா சூழல்?

நாடு கிடக்கிறது
பஞ்சத்தில்
நாசமிழைபோர் மஞ்சத்தில்

நான்கு

இருதரப்பு பேச்சு வார்த்தைக்
கேட்ட பிறகு
ஐ நா கரடி அமைதியானது

தேசிய இனங்கள்
சிலிர்த்தெழுதல்
பயங்கரவாதமென்றும்
சிறுபான்மை
சீற்றம் கொண்டால்
தீவிரவாதமென்றும்
மாளிகை வெள்ளை
நடைமுறை கருப்பு

தேடினாலும்
கிடைக்கவில்லை பின்லேடன்
தினசரி நடக்கிறது அநியாயம்

ஐந்து

பட்டமில்லாது வாழ்தல்
பாவமெனக் கருதியது
பச்சோந்தி எனவே

நிறத்திற்கொரு பெயர்
நேரத்திற்கொரு
புனைப்பெயர்

கெட்டதைத்
தொடர்ந்து செய்தால்
கிடைக்கும் சில கௌரவம்
பட்டதை
உரைக்காவிட்டால்
பாராட்டு விருது உண்டு

தலைவர்கள் மருத்துவர்கள்
தமிழ் மக்கள் நோயாளிகள்

Advertisements

3 பதில்கள் to “பஞ்ச தந்திரக் கவிதைகள்”

  1. nila said

    arumaiyana nitharsanathai vilakkum kavithai……

  2. இரண்டாவது செம்மொழிக்கவிதை பிடிச்சுருக்கு….

  3. karthick said

    arumaiyaana pathippu thozhare!!!!!

    karthick

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: