யுகபாரதி

2010 தஞ்சை

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 3, 2010

ஓங்கி உயர்ந்த பெருங்கோயில்
உள்ளே இருக்கும் சிவலிங்கம்
வீங்கிப் பெருத்த திருநந்தி
வியக்க வைக்கும் மேல்கலசம்

அகண்டு விரிந்த மணிமாடம்
அதைவிட நெடிய மதில்கோட்டை
புகழச் சொல்கிற நுழைவாயில்
புழங்கிட ஏற்ற பிரகாரம்

ஆண்ட சோழப் பரம்பரையின்
அழகைக் காட்டும் சிற்பங்கள்
மாண்டு விடாத மாண்போடு
மனதைக் கவ்வும் தஞ்சாவூர்

ஆற்றுக் கரையில் சங்கீதம்
அன்பைப் பேணும் ஜனக்கூட்டம்
காற்றைக் கீறும் காவிரியால்
கதிர்கள் குனிந்த வயற்காடு

வண்ணத் தட்டில் ஓவியமும்
வாகாய் வனைந்த வீதிகளும்
உண்ணற் கரிய அறுசுவையும்
உவமை இல்லா பேரின்பம்

தலையை ஆட்டும் பொம்மைகளும்
தமிழை உமிழும் வெற்றிலையும்
சிலையில் முகிழ்ந்த சிந்தனையும்
செப்பிட இயலா சீராண்மை

ஆடற் கலையும் பாவகையும்
அழகிய வீணை செய்வினையும்
கூடல் புரிந்து குலவியதால்
குவிந்து போயின இதிகாசம்

போகம் மூன்றும் செழிப்பாக
புரிந்த தொழிலோ விவசாயம்
லோகம் யாவும் உணவுண்ண
சுழண்ற ஏரே குலதெய்வம்

ஊனை உயிரைக் காவாமல்
உழவைக் காத்த தொருகாலம்
யானை காலால் நெல்லடித்து
எப்பவும் நிறைந்த பத்தாயம்

ஆட்சி மன்ற பெறுப்பேற்க
ஆய்ந்த முறைதான் குடவோலை
சாட்சி கூறும் கல்வெட்டு
சங்கிலி தொடராய் ராஜாங்கம்

தேரின் காலில் மிதிப்பட்டு
தேய்ந்தே போன கன்றுக்கும்
ஊரில் உண்டு நீதியென
உலகிற் கீந்தோம் புதுப்பாதை

சோழர் கால வீராப்போ
சோர்ந்து போனது சோறின்றி
ஏழ்மை வந்து குடியேற
எதுவும் இல்லை இப்போது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: