யுகபாரதி

நாணயம் – திரைப்படப் பாடல்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 4, 2010

இயக்கம் : சக்தி எஸ்.ராஜன்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடல் : யுகபாரதி
குரல் : சுனித்தா சாரதி

பல்லவி:01

தென்றல் காற்று
பூவுக்காக

சிதறும் தூறல்
பூமிக்காக

இன்று யாவும்
நாளைக்காக

எனது  பாடல்
யாருக்காக?

வந்தோமே வாழ்வில்
ஆனாலும் தேடல் தொடர
நிலாவைப்போல் தேயும் தேதிகள்

சரணம்:01

கட்டும் ஆடை
பேருக்காக

கலைந்துப் போகும்
தேவைக்காக

உதட்டுச் சாயம்
ஆசைக்காக

உலர்ந்துப்போகும்
லீலைக்காக

எல்லாமே மாயம்
என்றாகும் வாழ்வில் தினமும்
கனாவைப்போல்
தீரும் ஆசைகள்

பல்லவி: 02

கூடக் கூட கூடாத கூடல்
தேடத்தேட தீராத தேடல்
பாடப்பாட ஓயாத பாடல்
சுகமே சுகமே

சரணம்:02

வீசுகின்ற பூவாசம்
பூவுக்கில்லையே சந்தோஷம்

பூசிக்கொள்கிறேன் ஏதேதோ
தேகம் எங்கிலும் உன்வாசம்

கண் உண்டு காண
கண் உண்டு
கண்ணிலே போதை உண்டு

இன்பமே யாவும்
இன்பம்தான்

பெண் இன்றி துன்பம்தான்

பல்லவி:03

தொட்டுக்கொள் நாளும்
தொட்டுக்கொள்

உன்னிடம் நானே நானே

சொந்தமே யாரும்
சொந்தம்தான்

நீ சொன்னால் சொர்க்கம்தான்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: