யுகபாரதி

சண்டக்கோழி – திரைப்படப் பாடல்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 5, 2010

படம் : சண்டைக்கோழி (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: லிங்குசாமி
குரல் : விஜய் யேசுதாஸ், ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

பல்லவி

தாவணிப் போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு

கை மொளைச்சி
கால் மொளைச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கன்னா கன்னா மூச்சு
ஏன் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு

இரவும் வருது
பகலும் வருது
எனக்குத் தெரியல

இந்த அழகு சரிய
மனசு எரிய
கணக்குப் புரியல


சரணம் 01

ரெண்டு விழி ரெண்டு விழி
சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல்
பஞ்சு மெத்த தோழியா

பம்பரத்தப் போல நானும்
ஆடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணீ நீ கொடுக்க
ஆகிப்போகும் தீர்த்தமா

மகாமகக் குளமே..
என் மனசுக்கேத்த முகமே
நவாப்பழ நிறமே
என்னை நறுக்கிப் போட்ட நகமே

இதுக்கு மேல இதுக்கு மேல
எனக்கு ஏதும் தோணல

கிழக்கு மேல விளக்குப் போல
இருக்க வந்தாளே – என்னை
அடுக்குப்பானை முறுக்கப் போல
உடைச்சு தின்னாளே

சரணம் 02

கட்டழகுக் கட்டழகுக்
கண்ணு படக் கூடுமே
எட்டிநில்லு எட்டிநில்லு
இன்னும் வெகு தூரமே

பாவாடைக் கட்டி நிற்கும்
பாவலருப் பாட்டு நீ
பாதாதி கேசம் வர
பாசத்தோடக் காட்டு நீ

தேக்கு மர ஜன்னல் – நீ
தேவ லோக மின்னல்
ஈச்சமர தொட்டில் – நீ
எலந்தப்பழக் கட்டில்

அறுந்த வாலு குறும்புத் தேளு
ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்கொல குலுங்கக் குலுங்க
சிரிச்சு நின்னாலே – இவ
ஓரவிழி நடுங்க நடுங்க
நெருப்பு வச்சாளே

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவளைக் கண்டாளே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே

விட்டுடு விட்டுடு ஆள விட்டிடுடு
பொழச்சு போறான் ஆம்பளAdvertisements

2 பதில்கள் to “சண்டக்கோழி – திரைப்படப் பாடல்”

 1. karthick said

  தேக்கு மர ஜன்னல் – நீ
  தேவ லோக மின்னல்
  ஈச்சமர தொட்டில் – நீ
  எலந்தப்பழக் கட்டில்

  Migaiyaana karpani endrukm; indha varigal migavum azhaga irundhavai thozhare!!!!

  karthick

 2. மிகபிடித்த பாடல் அதிலும் தங்கள் வரிகளில் ரெண்டுவிழி ரெண்டுவிழி சண்டையிடும் கோழியா ரசனையா எழுதியிருக்கீங்க யுகா….!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: