யுகபாரதி

ஆலிங்கனம்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 6, 2010

o

இந்தத் தெருவின் முடிவில்
உன் வீடு இருக்கிறது
அடுத்தத் தெருவில்
ஒரு பூந்தோட்டமிருக்கிறது
எந்தத் தெருவில்
இடம் மாறி நுழைந்தாலும்
மனம் நிறைய பறித்துத் திரும்பலாம்
பூக்களை

o

ஆண் பெண் நட்பு குறித்து
என்ன நினைக்கிறாய்
எனக் கேட்ட
என் நாலாந்தர முற்போக்குத்தனத்தை
கேலி செய்வது போலிருந்தது
உனது ஆலிங்கனம்

o

இடைவெளிகள்தான்
நெருக்கத்தைத் தீர்மானிக்கின்றன
எனினும்
நெருக்கமற்ற இடைவெளிகள்
பிரயோஜனமற்றவை

o

ஒரு தீக்குச்சி போல
தீர்ந்துவிடுகிறது
உன்னிடம் பேசுவதற்காக
நான் சேமித்த சொற்கள்

போன பிறகும்
மணம் வீசிக்கொண்டிருக்கும்
ஊதுவத்தியைப் போன்றதுன்
வார்த்தைகள்

o

தோற்பதற்கும்
விட்டுக் கொடுப்பதற்கும்
நிறைய வித்தியாசமிருக்கிறது

தோற்ற பிறகு
விட்டுக் கொடுப்பது
தியாகம்
தோற்கக்கூடாதென
விட்டுக் கொடுப்பது
நேசம்

நான் தோற்க நினைக்கிறேன்
நீ விட்டுக் கொடுக்கிறாய்.

o

Advertisements

2 பதில்கள் to “ஆலிங்கனம்”

 1. //தோற்ற பிறகு
  விட்டுக் கொடுப்பது
  தியாகம்
  தோற்கக்கூடாதென
  விட்டுக் கொடுப்பது
  நேசம்

  நான் தோற்க நினைக்கிறேன்
  நீ விட்டுக் கொடுக்கிறாய்.//

  அழகு.. அழகு…

 2. தமிழ்த்தோழன் said

  அன்பின் கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு
  தங்கள் பதிவுகளை தவறாமல் இணையத்தில் படித்துவரும் வாசகன் நான்.
  சமூகத்தின் மீதான பார்வை,தமிழை கையாளும் விதம் மற்றும் தங்களின் பதில் சொல்லும் பாங்கு மற்றவர்களை விட வித்தியாசமானதாக நான் கருதுகிறேன்.
  தங்கள் தமிழ்பணி தொடரட்டும்.
  நன்றி
  தமிழ்த்தோழன் – france

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: