யுகபாரதி

பசிபொறுக்கா பதினாறு

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 6, 2010

0

நுகரத் துடித்த
நாசியின் மூச்சு
நகர மறுத்தது
உன்னிடமிருந்து

காம்புகளே வேர்களாயின
கதைபேச நினைத்துவந்து
கவிதையோடு
திரும்புகிறது காலம்

0

எண்ணெய் பிசுக்கோடு
இன்னுமிருக்கிறது
நமது
பள்ளிக்கூட சுவர்கள்

மழைக்கும்
ஒதுங்க முடியாது
ஒழுகும் கூரை

கொட்டும் உணர்வுகளைச்
சுமந்து திரிகிறோம்
நீயும் நானும்

0

என் புத்தகத்தில் நீயோ
உன் புத்தகத்தில் நானோ
பரிமாறிக்கொண்டதில்லை
பருவத்தை

பரிசுக் கொடுக்க
வசதி இல்லாததாலேயே
தரவேண்டியதாயிற்று
முத்தத்தை

0

நிலவு காட்டி
சோறூட்டும் தாயை
இடையில்
இருத்திக் கொண்டு
உன் முகத்தை
நிலவென்றது சிநேகம்
பசிபொறுக்கா பதினாறு

0

கோதுமைக் குதிரையென
அவளை உருவகித்தேன்
பாதிப் பார்வையில்
என்
இருதய  சாலையெங்கும்
குளம்படிச் சத்தம்

0

மாமிசக் கவிதைபோல்
மற்றொருத்தி
மாளாத காதலால்
மருந்துண்டு மரித்தாள்

தேவதைகளின் நெற்றியில்
திருநீறு பூசுகிறது
இயலாமை

0

பிரியத்தை விட
பிணக்குற்று பிரிதல்
கொடுமை

சந்திக்க நேர்கையில்
அழக்கூட தோணாமல்
அவரவர் குழந்தைகளை
பொய்யாய்க் கொஞ்சிட

0

தண்டனைகளுக்கு
அப்பாற்பட்ட தவறுகளைச்
செய்திருக்கிறேன் நானும்

ஆட்டச் சொன்னாய் தொட்டிலை
உன் மீதுள்ள கோபத்தை
குழந்தையிடம் கிள்ளினேன்

0

ஒருமுறை
நீ கொடுத்த நெல்லிக்கனி
நீர்பருகும் ஒவ்வொரு முறையும்
இனிக்க
மீண்டும் நடந்து வருகிறார்கள்
அதியமானும் அவ்வையும்

0

அரைத்த வெந்தயத்தை
தேய்த்து குளித்தும்
தணியவில்லை சூடு

செக்க சிவந்த
கண்ணிலிருந்து
வழிகிற ஏக்கம்
பிடித்தாட்டுகிறது
காட்டேரி போல

விதிர் விதிர்த்து
கழிகிறது நள்ளிரவு

குளத்தில் வீச
குவித்த கற்களால்
குறிவைத்துத் தாக்குகிறேன்
தானாய்த் தேயும்
நிலவை

0

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: