யுகபாரதி

பீமா – திரைப்படப் பாடல்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 7, 2010

படம் : பீமா
இயக்கம் : என்.லிங்குசாமி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : யுகபாரதி
குரல் : ஹரிகரன், மதுஸ்ரீ

பல்லவி

ரகசியக் கனவுகள்
ஜல் ஜல் – என்
இமைகளைக் கழுவுது
சொல் சொல்

இளமையில் இளமையில்
ஜில் ஜில் – என்
இருதயம் நழுவுது
செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே
விழுந்தது உனதுருவம் – ஓ
உதடுகளால் உனைப் படிப்பேன்
இருந்திடு அறை நிமிடம்

தொலைவதுபோல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்

குழு:

இறகே இறகே
மயிலிறகே – வண்ண
மயிலிறகே வந்து தொடு அழகே

தொட தொட தொடர்கிற
சுகம் சுகமே  – கண்
படப் பட புதிர்களும் அவிழ்ந்திடும

குயிலினமே  குயிலினமே
எனக்கொரு  சிறகு கொடு
முகிலினமே   முகிலினமே
முகவரி எழுதி கொடு
அவனிடமே   அவனிடமே
எனது கனவை அனுப்பு

சரணம் 01

மறுபடி ஒருமுறை
பிறந்தேனே
விரல் தொட புருவமும்
சிவந்தேனே

இல்லாத வார்த்தைக்கும்
புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும்
சுடுகின்ற முத்தம் நீ

சுடும் தனிமையை உணர்கிற
மரநிழல் போல  – எனைச் சூழ

நரம்புகளோடு குறும்புகள் நாளும்
எழுதிய கணக்கு
எனதிரு கைகள் தழுவிட நீங்கும்
இருதயச் சுளுக்கு

சரணம் : 02

உயிரணு முழுவதும்
உனைப் பேச
இமை தொடும் நினைவுகள் அனல் வீச

நெனச்சாலே செவப்பாகும்
மருதானித் தோட்டம் நீ
தலைவைத்து நான் தூங்கும்
தலகாணி கூச்சம் நீ

எனதிரவினில் கசிகிற
நிலவொளி  நீயே – படர்வாயே

நெருங்குவதாலே நொறுங்கிவிடாது
இருபது வருடம்
தவறுகளாலே தொடுகிற நீ ஓர்
அழகிய மிருகம்

Advertisements

ஒரு பதில் to “பீமா – திரைப்படப் பாடல்”

  1. மிக அற்புதமான வரிகள். மதுரை திருமலைநாயக்கர் மகாலில் இந்தப் பாடல் எடுக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: