யுகபாரதி

மகள்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 7, 2010

அம்மாவின்
புகைப்படத்திலுள்ள சிறுவயது சாயலை
அக்காவின் குறும்புச் சிதறலை
அப்படியே பிரதிபலிக்கிறாள் என் மகள்

அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது
வீடு.

வீட்டிலுள்ள பொருட்கள் மீது
அன்பு செலுத்துகிறாள்

வீறிட்டு கேவும்போது
பாலோ பொம்மைகளோ கொடுத்தால்
அமைதியாகிவிடுறாள்

பாடலைக் கேட்டு முகம் மலர்கிறாள்
நாட்டியக் காரியைப்போல
நடக்கிறாள்

சிரிப்பில்
ஒரு பெண்ணாய்ப் பிறந்ததற்கான
எந்த துக்கமும் அவளிடம்
தென்படவில்லை

கொஞ்சநேரம் கூட ஓய்வதில்லை
உறங்குவதற்கு முன் மின்விசிறியின்
சுழற்சியைக் கவனிக்கிறாள்

முத்தங்கொடுத்தால் சினுங்குகிறாள்
அடம்பிடிக்காமல் சொல்வதைக் கேட்கிறாள்

இப்படித்தான் நீயுமிருந்தாயா
குழந்தையில் என்றேன் மனைவியிடம்,

அப்போதெல்லாம் நான் அழுததே
இல்லை என்றாள் அப்பாவிபோல

Advertisements

2 பதில்கள் to “மகள்”

 1. karthick said

  neenga edhir partha adhe veguli thanilaye ungal manaivi amaidhadharkku vazthukkal thozhare!!

  karthick

 2. vittalan said

  என்
  நினைவுகளிலும் வழிந்தோடுகிறது ..
  விடுமுறையில்
  வீட்டில் நான் கண்டு ரசித்த
  குழந்தையின் கொஞ்சல்கள் ..

  அருமை ..

  ராணுவத்திலிருந்து
  தேவராஜ் விட்டலன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: