யுகபாரதி

கல்லெறிதல்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 9, 2010

சாலையைச்
செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட மணலில் தான்
கோவில் கட்டி
விளையாடுவோம்

கலசத்திற்கு பதிலாக
ஒரு கொத்து காட்டாமினுக்கை
நட்டுவைப்போம்

நடுவிலொரு குழி பிரித்து
உருண்டையாய்
களி மண்ணைப் பிடித்து
கர்ப்பக் கிரகம் அமைப்போம்.

காகிதப் பூவால்
அலங்கரித்து
கன்னத்தில் போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்
மீண்டும் வந்து பார்க்க

கலசத்தில் பட்டிருக்கும்
நீரபிஷேகத்தில்
சற்றே கலைந்திருக்கும்
அதன் உரு.

சோகத் தூவானமாய்க்
கண்கள் அரும்பும்.

கோயிலைச் சிதைத்த
நாயின் மீது
கல் விட்டெறிவர்
ஹமீதும் பீட்டரும்.

Advertisements

2 பதில்கள் to “கல்லெறிதல்”

  1. kal thnthathu kal , manam thirakka eriyapatta kal . kal manithneyam . nee erintha kal arumai.

  2. இதை விட மத நல்லிணக்கத்திற்கு வேறு எங்கும் நான் இதுவரை படித்தது இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: