யுகபாரதி

காமம்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 9, 2010

பொங்கிவிடுமென
பதறிப் பதறி
பாலுக்கு முந்தியே
வழிந்துவிடுகிற உன்னை

நெடியேறுமென
நினைத்து நினைத்தே
மிளகாயைவிடவும்
காரமாகிவிடுகிற உன்னை

தகிக்கும் இரவில்
தலையணை வாசமாக
கண் வழியே ஆயுளைக்
கரைப்பவளாக

பல் வரிசைக்கிடையே
பாசி மணியாய்
கொறித்துக் கொண்டிருக்கிறாய்
என்னை

பாதநுனியில்
பரவுகிற நதியாய்
தாகத்தோடு
மூழ்கடிக்கிறாய்

ரத்த ருசி கண்டவை
பேய்களென்றால்
முத்த ருசி கண்ட
மோகினி நீ

மக்கி மண்ணாய்ப் போக
மனமின்றி உன்னிடம்
சிக்கி சீரழிகிறதென்
காமம்

Advertisements

4 பதில்கள் to “காமம்”

 1. மற்றவர்களின் கவிதையைப் பார்த்து நம்மாலும் ஏன் எழுத முடியாது என்று நிணைத்து முயற்சிப்பதுண்டு. எழுதியதும் உண்டு. இப்போது மின் அஞ்சல் வாயிலாக உங்கள் கவிதையை படித்ததும், குறிப்பாக அம்மா கவிதையைப் படித்ததும் உண்மையான உணர்வாக ஒழுக்கமான சிறந்த வார்த்தைகள் அடங்கிய கவிதை என்பதை இன்று கண்டு கொண்டேன்.

  வளர்க வளமுடன்.
  ஜோதிஜி தேவியர் இல்லம் திருப்பூர்

 2. sevar0301 said

  Asathitinga poonga.

 3. uumm said

  very very nice…

 4. rammohan1985 said

  Fantastic Lines…
  மக்கி மண்ணாய்ப் போக
  மனமின்றி உன்னிடம்
  சிக்கி சீரழிகிறதென்
  காமம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: