யுகபாரதி

பட்டியல்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 9, 2010

நீ
யாருடைய பட்டியலிலும்
இடம்பெறாதவன் மட்டுமல்ல
பட்டியல் போடுகிறவனின்
பார்வையை
வேண்டுமென்றே தவிர்ப்பவன்
என்றுகூட சொல்லலாம்

பட்டியல்
தயாரிப்பவனின் நோக்கம்
இன்னொருவனின் பட்டியலில்
இடம் பிடிப்பதற்கென்பதை
தெரிந்து வைத்திருக்கிறாய்

எனவே
எளிதாய் கவிஞனாகும்
சாமர்த்தியத்தைத்
தொலைத்துவிட்டவன்

ஆளுக்கொரு
பட்டியல் வீதம்
தத்தமக்கு உரியவரை
பரிந்துரைக்கிறார்கள்

யாருக்குரியவன்
நீ என்பதை
உணர்ந்தவர்கள்
பட்டியல் தயாரிப்பை
விரும்பாதவர்கள்

நம்பிக்கையூட்டும்
பட்டியலில்
நீ இல்லையென
வருந்தத் தேவையில்லை

எனில்
இங்கிருக்கும் யாதொரு
பட்டியலும்
நம்பிக்கைக்குரியதல்ல

Advertisements

2 பதில்கள் to “பட்டியல்”

  1. nivedha said

    padaipu tharamanathai irundal athu nichiyam vasaganai sendru adiyum yuga.’dhagam ullavargalai thameerum thedik kondu than irukirathu’.

  2. யுகபாரதி,

    இது கவிதையா?
    இதுவும் கவிதையா?
    இதுதான் கவிதையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: