யுகபாரதி

கையெழுத்து

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 11, 2010

எனது கையெழுத்து
என்ன தரப்போகிறது
உனக்கு

பதட்டமும் பிரியமும்
பரவும் நெரிசலிடையே
நீளும்
உனது குறிப்பேட்டில்
எதைக் கக்குவது

எனது புகழையா
எனது திமிரையா

மேடையேறியது முதல்
உனது அழகுகளை
உனது அவயங்களை
கொடூரப் பசியோடு
குடித்தவனிடமா

ஒரு வஞ்சகனிடம்
ஒரு பொய்யனிடம்
ஒரு துரோகியிடம்
பெறுவதைக் காட்டிலும்
கேவலமானது
பிரபலமானவனின் கையெழுத்து

அறிவாயா நீ
சிநேக மையத்தில்
விரியும் வக்கிரத்தை

பாதுகாப்பதற்கு
எதுவுமில்லாதவளே
பாவத்துக்குரியவளே

குழந்தைத்தனமான
உனது கைகளைவிடவா
கௌரவமானது
எனது கையெழுத்து

Advertisements

4 பதில்கள் to “கையெழுத்து”

  1. karthick said

    Sila padaipaaligalin, sedhilamadaindha gunagalai unarthum indha kavidhai arumai thozhare…

    karthick

  2. vizhiyan said

    🙂

  3. திருப்பூர் வந்தால் அவஸ்யம் வீட்டுக்கு வாங்க பாரதி.

  4. உங்கள் வரிகளை பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: