யுகபாரதி

சுப்ரமணியபுரம் – திரைப்பாடல்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 20, 2010

படம் : சுப்ரமணியபுரம்
இயக்கம் : சசிகுமார்
இசை : ஜேம்ஸ்வசந்தன்
பாடல் : யுகபாரதி
குரல் : சங்கர் மகாதேவன்

பல்லவி

காதல் சிலுவையில்
அரைந்தாள் என்னை
தீயின் குடுவையில்
அடைத்தாள் கண்ணை

கனவுகளில் விழுந்த எனை
கவலையிடம் அனுப்புகிறாள்

இளமை எனும் கருவரை எங்கும்
எரிதழலை கொளுத்துகிறாள்

உயிருதிரும்போது
உறவுகளும் வீணோ
உலகம் இது தானோ

சரணம் : 01

கழுகளின் கண்களிலே
மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை
செவி உணர வாய்ப்பில்லை

புழுதியிலே ரத்தினமாய்
இருந்தது ஒரு தொல்லை
பாவங்களைப் பாராமல்
பழகியதனால் தொல்லை

தேவை பூமியை தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்

சரணம் : 02

அவளுடைய கற்பனையை
எழுத வழி இல்லை
கூண்டுக் கிளி நான் ஆனேன்
வெளி வரவும் வாய்ப்பில்லை

இவனுடைய உன்மைகளை
உளர வழி இல்லை
தோல்விகளின் வீடானேன்
துணை வரவும் ஆளில்லை

வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீவு

Advertisements

ஒரு பதில் to “சுப்ரமணியபுரம் – திரைப்பாடல்”

  1. தமிழ்த்தோழன் said

    ஒலி இணைப்பையும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நம்புகின்றன்.
    நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: