யுகபாரதி

பொறி – திரைப்பாடல்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 20, 2010

படம் : பொறி
இயக்கம் : சுப்ரமணியம் சிவா
இசை : தினா
பாடல் : யுகபாரதி
குரல் : மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ

பல்லவி

பேருந்தில் நீயெனக்கு
ஜன்னல் ஓரம்
பின்வாசல் முற்றத்திலே
துளசி மாடம்

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
செல்லக் கோபம்

ஆளில்லா நள்ளிரவில்
கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

சரணம்: 01

பயணத்தில் வருகிற
சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற
முதல்கூச்சம்

பரீட்ச்சைக்குப் படிக்கிற
அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும்
முதல்மாலை

புகைப்படம் எடுக்கையில்
திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில்
பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே

தினமும் காலையில்
எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே

சரணம்:02

தாய்மடி தருகிற
அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின்
குறுஞ்சிரிப்பு

தேய்ப்பிறை போல்படும்
நகக்கணுக்கல்
வகுப்பறை மேஜையில் இடும்
கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட
குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற
பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில்
எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

Advertisements

4 பதில்கள் to “பொறி – திரைப்பாடல்”

 1. karthick said

  எழுதும் கவிதையில்
  எழுத்துப் பிழைகளை
  ரசிக்கும் வாசகன் நீதானே

  Idha vida oru kadhala sollradhukku romba romba kastam thozhare!!!! miga arumai….ennoda viruppa padalgala indha padalukku mukkiyamaana edam irukku…

  Vazhthukkal
  Karthick

 2. எனக்குப் பிடித்த உங்களுடைய பாடல்களில் ஒன்று இது !

 3. Kolanji said

  it is my favorite song…

 4. Suresh said

  “செல்போன் சிணுங்கிட
  குவிகிற கவனம்
  அன்பே அன்பே நீதானே”

  Amazing lines..

  One of my favorites…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: