யுகபாரதி

நகரத்தின் ஞாயிற்றுக்கிழமை

Posted by யுகபாரதி மேல் பிப்ரவரி 24, 2010

நகரத்தின் ஞாயிற்றுக்கிழமை
விநோத மணமுடையது

அந்த மணத்தில்
ஓய்வுக்கான துய்ப்புகளோடு
மக்கள் தாமதமாகப் பல்துலக்குகிறார்கள்

நாளேடுகளை வரிவிடாமல் வாசித்து
மதிய வெய்யிலுக்குப் பின்
குளிக்கப் போகிறார்கள்

கறைபடிந்த தங்கள் ஆடைகளை
சவுக்காரத் தூளில் ஊறவைத்து
மிக மெதுவாகத் துவைக்கிறார்கள்

கலைந்துகிடக்கும் அலமாரியை
சரி செய்வதன் பொருட்டு மேலும்
பொருட்களை கலைந்து விடுகிறார்கள்

நெருக்கத்தில் மனைவியையும்
குழந்தைகளையும் கண்பார்த்து
கொஞ்சுகிறார்கள்

முந்தைய ஞாயிறுபோல
வரும் ஞாயிறும் இவ்வாறே அமையும் என
நம்புகிறார்கள்

மூச்சு நிதானமானதாக
உணர்கிறார்கள்

ஆறு நாளுக்கான வாழ்வை
ஒரே நாளில் வாழும்
வெட்கமில்லாமல்

Advertisements

4 பதில்கள் to “நகரத்தின் ஞாயிற்றுக்கிழமை”

 1. நன்றாக இருந்தது.

 2. PPattian said

  //ஆறு நாளுக்கான வாழ்வை
  ஒரே நாளில் வாழும்
  வெட்கமில்லாமல்
  //

  வலி தரும் வரிகள்..இதுவே தலை விதி !

 3. Toto said

  ரொம்ப‌வே ஈர்ப்பான‌வை உங்க‌ள் எழுத்துக்க‌ள்.

  -Toto
  http://roughnot.blogspot.com

 4. இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாம். மிகவும் மேலோட்டமாக எழுதியுள்ளதாக தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: