யுகபாரதி

உதவி இயக்குநர்

Posted by யுகபாரதி மேல் பிப்ரவரி 25, 2010

திரைப்பட உதவி இயக்குநராய்
இருப்பதற்கான தகுதிகளை
முதலில் பட்டியலிடுவோம்

ஒன்று
அதிருப்தியோடு இருத்தல்
இரண்டு
வறுமையைக் கவர்தல்
மூன்று
கூடுதல் வெறியுடையவனாகக்
காட்டிக் கொள்ளுதல்

மூன்று முக்கிய அம்சங்களைப்
பெற்றிருப்பவர்கள் விரைவில்
இயக்குநராகும் வாய்ப்பு பெறுகிறார்கள்

பணிபுரியும் படத்தைக்
குறைவானதாகவும்
தான் படைக்கப் போவதை
மேலானதாகவும் கருதும் இயல்போடு
தாடி வளர்க்கிறார்கள்

தானொரு உதவியாளனாய்
இருக்க நேர்ந்தமைக்கான
குற்ற உணர்வு எப்போதும் அவர்களை
வதைக்கிறது

ஆதர்சமாக பேச
குரோசேவாவோ ரேயோ ஷாம்பெனகலோ
அவர்களுக்கு உதவுகிறார்கள்

பொதுவாக அவர்கள்
கசப்பிலிருந்து இனிப்பை
உறிஞ்சுகிறார்கள்

முற்பாதியைத் தொலைத்து
பிற்பாதியை கண்டடைகிறார்கள்

சங்கடமாயிருக்கிறது

பெரும்பாலும் ஏமாந்துவிடுகிறார்கள்
அல்லது அவர்கள் உங்களை
ஏமாற்றத் தொடங்குகிறார்கள்

Advertisements

ஒரு பதில் to “உதவி இயக்குநர்”

  1. கவிதை நல்லாயிருக்குங்க…

    ஆனா…
    ஆதர்சமாக பேச
    குரோசேவாவோ ரேயோ ஷாம்பெனகலோ
    அவர்களுக்கு உதவுகிறார்கள்.
    இந்த இடம் புரியல… அதாவது அவரைப்பற்றி..தெரியல.

    அப்புறம் அந்த கடைசி மூன்று வரி முழுக்கவிதையையும்.. தாங்குகிறது.

    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: