யுகபாரதி

இடம்

Posted by யுகபாரதி மேல் மார்ச் 1, 2010

அந்த இடத்திற்குப்
போயிருந்தேன்

நம்முடைய சந்திப்பைத்
தொடர்ச்சியாக்கிய இடம்.எதிரே நூலகமும்
இடது புறத்தில் புல்வெளியும்
அப்படியே தானிருக்கின்றன

மரங்கள் முன்பைவிடவும்
கொஞ்சம் வளர்ந்திருக்கின்றன
நம்முடைய நேசத்தைப் போல்
எனலாமா

அந்த இடத்தை மறக்க முடியாது
தாயின் முலைபோல
காமம் சுரந்த இடமது

நீயறியாமல் உன்னை அல்லது
நீயறிந்து நான் மோகிக்க முயன்ற
முதல் முற்றமது

நான்குமுறை சரிசெய்தும் விலகாமல்
முந்தியைக் காற்று தொந்தரவுபடுத்திய
அந்த இடத்தை நீயும்
மறந்திருக்க வாய்ப்பில்லை

அந்த இடத்தைப் பற்றிச்
சொல்வதற்குக் காரணமிருக்கிறது.

இப்போதும் அங்கே
இரண்டுபேர் அமர்ந்திருக்கிறார்கள்
வெறும் நட்புதானென்று
வெளியே சொல்லிக்கொண்டு

Advertisements

3 பதில்கள் to “இடம்”

 1. karthick said

  Manikkavum Thozhare,

  nandraga irundhum, edho ondru illadhadhai pola unargirean indha kavidhaiyai vasikkum pozhuthu.

  Karthick

 2. //இப்போதும் அங்கே
  இரண்டுபேர் அமர்ந்திருக்கிறார்கள்
  வெறும் நட்புதானென்று
  வெளியே சொல்லிக்கொண்டு//

  ஆரம்பம் பழசாக இருந்தாலும் இந்த முடிவு “நச்”

 3. யுகபாரதி..,

  உங்களின் ரசிகன் நான்..,
  என்னுடைய கருத்து என்னவென்றால்
  கூடுமான வரைக்கும்
  ” முலை ” இந்த மாதிரியான
  வார்த்தைகளை தவிர்க்கவும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: