யுகபாரதி

நித்ய சொரூபர்கள்

Posted by யுகபாரதி மேல் மார்ச் 3, 2010

ஒரு சாமியாருக்கு நேர்ந்த அவமானம்
அந்தச் சாமியாரை மட்டுமே
சார்ந்ததல்ல

அவர்களுக்கும் தேவை ஆகாரம்
அவர்களும் வெளியேற்றவே வேண்டும்
கழிவுகளை

அவர்களின் தியான மண்டபத்தில்
அபிலாஷைகளின் குரல்
உக்கிரமாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

அவர்களுக்குப் பக்தைகள் மீது
பிரியம் கூடிவிடுகிறது

அவர்களால் வெளிப்படையாக
ஒருத்தியிடம் உறவு வைத்துக்கொள்ள
முடிவதில்லை

அவர்கள் போலிகளாக
சகலராலும் அடையாளப்படுத்தப்
படுகிறார்கள்

அவர்கள்
சராசரியிலிருந்து
விடுபட முயன்று தோற்றுவிடுகிறார்கள்

அவர்களுக்கும்
ஒரேவிதமான தண்டனைகளே
வழங்கப்படுகின்றன

அவர்கள்
உபதேசம் செய்து பிழைக்க விரும்பி
வெறும் வாய்களுக்கு அவல் ஆகிறார்கள்

அவர்கள்
எல்லோரையும் கைதூக்கிவிட
வந்த கடவுளென்று சொல்லி
கடவுளாலேயே கைவிடப்பட்டவர்களாக
ஆகிறார்கள்

3 பதில்கள் to “நித்ய சொரூபர்கள்”

  1. aruna said

    /அவர்கள்
    எல்லோரையும் கைதூக்கிவிட
    வந்த கடவுளென்று சொல்லி
    கடவுளாலேயே கைவிடப்பட்டவர்களாக
    ஆகிறார்கள்/
    ரொம்ப சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

  2. Surendran said

    //அவர்கள்
    எல்லோரையும் கைதூக்கிவிட
    வந்த கடவுளென்று சொல்லி
    கடவுளாலேயே கைவிடப்பட்டவர்களாக
    ஆகிறார்கள்//

    உண்மை.. நம் மக்களுக்கு இது புரிவதில்லையே…

  3. சிரவணன் said

    //அவர்களுக்கும் தேவை ஆகாரம்
    அவர்களும் வெளியேற்றவே வேண்டும்
    கழிவுகளை//

    ஆகாரம் தேவை என்பது மிகச் சரி.

    ஆனால், ‘அதை’ கழிவென்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கழிவு என்று கருதப்பட்டால் சந்நியாசத்தில் அதை வெளியேற்ற அனுமதிக்கப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

    *

    ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சமூக நிகழ்வை எளியமையான எழுத்துகளால் கவிதை படைத்திருப்பது பாராட்டுக்குரியது.

    பகிர்வுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: