யுகபாரதி

வாசம் செய்தல்

Posted by யுகபாரதி மேல் மார்ச் 8, 2010

மல்லிகைத் தோட்டத்தில்
பணியாற்றுபவர்களைக் கேட்டேன்
வாசத்திலேயே
உழல்வது எப்படியென்று

கொடிக்குக் கொடி கைதுழாவி
மலர்களைக் கொய்தெடுக்கையில்
எவ்விதம் உணர்கிறீர்கள் என்றும்

வயிறு காந்துகையில்
வாசனை நாசியை
தொடுவதில்லை என்றனர்

கோபம்

போக்குவரத்து நெரிசலில்
நீந்தும் வாகனத்தில்
நானும் ஒருவனாக அமர்ந்திருந்தேன்

ஒருவரை ஒருவர்
அதீத வெறுப்போடும்
அந்நியத்தோடும் பார்த்துக்கொண்டனர்

ஜனப்பெருக்கத்துக்கு
யார் யாரெல்லாம் காரணமென்று
வசைபாட தொடங்கினர்

அரசு ஏன் இதற்கெல்லாம்
வழிவகை செய்வதில்லை என்றும்
யாவும் ஊழல் மலிந்ததன்
உபாதை என்றும் பொருமினர்

வாகனங்கள் மெல்ல நகரத் தொடங்கின

அவரவர் தங்கள் சொர்க்கத்தை நோக்கி
நெரிசலுக்கு முன்பிருந்த மனநிலைக்குத்
திரும்பினர்

சிற்சில நேரங்களில் மக்களும்
கோபப்படவே செய்கிறார்கள்

வாய்த்தது வாய்க்காதது

வாய்த்ததைக்
கொண்டாடத் துவங்கிவிட்டால்
வாய்க்காதது ஒரு விஷயமேயில்லை

நம்மில் சிலர்
வாய்க்காததைச் சொல்லி
கிளர்ச்சிக்குத் தூண்டுவார்கள்

நம்மில் சிலர்
வாய்க்காததைச் சொல்லி
வருத்தப்படுத்தத் துடிப்பார்கள்

அவர்களை மறந்துவிடுவோம்

இன்னொருவர் துக்கத்தில்
இன்னொருவர் காமத்தில்
பங்கெடுத்துக்கொள்ள முன்வந்து

வாய்த்ததைக்
கொண்டாடத் துவங்கிவிட்டால்
வாய்க்காதது ஒரு விஷயமேயில்லை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: