யுகபாரதி

கவிஞன்

Posted by யுகபாரதி மேல் ஜூன் 23, 2010

பதிமூன்று வருடத்திற்கு முன்பாக அப்பாவைப் பார்ப்பதற்காகச் சென்னையிலிருந்து ஒரு பத்திரிக்கையாளர் வந்திருந்தார். பாலுசாமியோ, பவித்திரனோ அவரது புனைப்பெயர். இரவு வெகு நேரமாகிவிட்டது. பேசிக் கொண்டேயிருந்தார்கள். பேச்சு முடிவு பெறவில்லை. சமூகம், அரசியல், இலக்கியம் என விரிந்த பேச்சை, நாளை தொடர்வோம் என வந்தவரின் கண்கள் சொருகக் கண்டேன்.  அப்பாவும் புரிந்து கொண்டார்.

விடிந்ததும் அவரை ஆற்றுக்கு அழைத்துப் போகவேண்டிய பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. தஞ்சை பூக்காரத் தெருவில் அப்போது குடியிருந்தோம். அங்கிருந்து புது ஆற்றுக்குப் போவது சிரமமில்லை.

அதிகாலையில் அவரே என்னை எழுப்பினார். முகத்தைக் கழுவிக் கொண்டு அவரோடு கிளம்பினேன். உலக விஷயம் தெரிந்தவருக்கு வழிகாட்டும் பெருமையோடு வந்தவர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். கவிதைகளை மெல்ல நேசிக்கத் தொடங்கிய காலம் அது.

இலக்கியம் பற்றி அவர் நிறையத் தெரிந்திருந்தவர் ஆதலால், கவிதைகளைக் குறித்து ஏதாவது பேசமாட்டாரா என இருந்தது. நேரடியாகக் கேட்கவும் அச்சம்.

மூன்று மைல் தொலைவு. எது எதுவோ கேட்டுக் கொண்டு வந்தவர் “தமிழ்ஒளியைப் படித்திருக்கிறாயா?” என்பதற்கும் எதிரே ஒரு மரவண்டி வருவதற்கும் சரியாய் இருந்தது. வண்டிச் சத்தத்தில் அவர் தமிழ்ஒளியை என்றது என் காதில் தமிழ் மொழியை என்பதாகக் கேட்டது.

” தமிழ் மொழியைப் படித்திருக்கிறேனே” என்றது அவர் தமிழ் ஒளியை என விழுந்ததுபோல, “எங்கே ஒரு கவிதையைச் சொல் கேட்போம்” என்றார்.  ’நீராருங் கடலுடுத்த’ என ஆரம்பித்தேன். சிரித்துவிட்டார்.

அவர் சிரிப்பு எனக்கு அவமானமாயிருந்தது. அவர்மீது வைத்திருந்த பிரியம் தவறோ எனப் பட்டது. பிறகு என் காதில் விழுந்ததைச் சொல்லி சமாளித்தேன்.  தமிழ்ஒளியின் பெயர் என் காதில் விழுந்தபோது வானம் விடிந்திருந்தது. பறவைகள் பறக்கத் தொடங்கின. ஆற்றை அடைந்துவிட்டோம். குளிப்பதற்காக அவர் இறண்ட்க்கினார். நான் தளும்பத் தொடங்கினேன்.

யாரிந்தத் தமிழ் ஒளி? பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு கவனித்திருக்கப்பட வேண்டியவர் பொதுவுடமைப் பற்றாளர். ’கடவுளின் பெயரால்’ என்றொரு கவிதை…

திருப்பதியி லிருக்கின்ற கடவுளுக்குச்/ சிலை முடியில் பனிப்பட்டால் சளிபிடித்து / வரும்காய்ச்சல் எனப்பயந்து பக்தர் கூட்டம் / வைரமுடி தனைச்செய்து மாட்டும் அந்தோ / தெருப்புழுதி தனில் அவர்கள் வீட்டின்முன்னே / சிரங்கினின்று சீழொழுகச் சொறி பிடித்து / குளிராலே ஆடையின்றி / வாடுகின்ற மனிதர்களைத் திரும்பிப் பாரான்

 

மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்திலும் பின்னர் பொதுவுடமை இயக்கத்தோடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவரது மாதவி காவியம், வீராயி காவியம்.

பாரதியின் கவிதைகளைச் சித்தர் மரபினைச் சார்ந்ததாகவும் பாவேந்தர் கவிதைகளைச் சங்க இலக்கியத்தை மீட்டுத்தந்ததாகவும் கூறும் மூதறிஞர் பா அப்பாதுரையார் தமிழ் ஒளியின் கவிதை மாயங்களை, குறிப்பாகச் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகியவற்றின் அதிசயத்தை மீட்டுத் தருவதாக எழுதியிருக்கிறார்.

இருட்டடிப்புச் செய்யப்பட்ட பல தன்னிகரற்ற கவிஞர்களின் பட்டியலில் தமிழ் ஒளியின் பெயரும் இருப்பது தமிழின் சாபம்.

தமிழ் ஒளியின் கவிதைகளை மீள் வாசிப்புக்கு உட்படுத்தவேண்டும்.  அரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் விமர்சன ஈருளியால் பேன் எடுத்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுதல் நல்லது. 

 

(”ஒன்று” தொகுப்பிலிருந்து)

Advertisements

ஒரு பதில் to “கவிஞன்”

  1. thamilannan said

    Vanakkam
    thamil oliyayai patri melum eluthavum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: