யுகபாரதி

மீண்ட சொல்

Posted by யுகபாரதி மேல் ஜூன் 28, 2010

(தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு சிறப்பாக தனது இலக்கினை எட்டியிருக்கிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள ஊடகங்கள் தொடங்கிவிட்டன.இந்த முயற்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டும் வரவேற்கத் தக்கதாகவே தோன்றுகிறது.தமிழின் தீவிர அல்லது நவீன படைப்பாளிகளின் பங்களிப்பு குறைவே என்னும் குறையைத் தவிர்த்து,இந்த மாநாடு சில சகாயங்களைத் தமிழுக்குப் பெற்றுதரும் என்பதில் ஐய்யமில்லை.ஆய்வரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் விரைவில் அனைவரின் கைக்கும் கிடைக்கும்படி செய்தல் அவசியம். இதற்கு முன்னும் நடந்த தமிழ் மாநாடுகளில் இந்த மாநாட்டில் நிகழ்ந்த குளறுபடிகள் உண்டுதான்.எனினும்,இது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடும் என நம்புவோமாக. மாநாட்டின் இறுதிநாள் கருத்தரங்கில் தோழர்.அருண்மொழி,போரை புறமொதுக்கி பொருளை பொதுமையாக்குவோம் என்ற தலைப்பில் பேசியவிதம் ஐந்து நாள் மாநாட்டிலேயே ஆகச் சிறந்த பொழிவாகப் படுகிறது.மாநாட்டை முன்வைத்து தினமணிக்காக எழுதிய கவிதை கீழே)

மீண்ட சொல்

நாம் எல்லாவிதமான
மகுடங்களையும் தயாரித்தோம்
பொருத்துவதற்கான தலையைக்
கொய்துவிட்டு

நாம் எல்லாவிதமான
ஊர்திகளையும் உருவாக்கினோம்
யாத்திரிகனின் பயணத்தை
பறித்துக்கொண்டு

நாம் நம்மை ஆளத்துணியாமல்
யாருக்கோ அடிமையாயிருந்தோம்

நாம் நம்முடைய காப்பியங்களை
பிறர் வியந்ததால்
மெய்மறந்தோம்

நம்முடைய கௌரவங்களை
நம்முடைய மரபுகளை சாகக்கொடுத்து
சாப்பிட்டோம்

கருவேலங் காடுங்களை உதறிவிட்டு
பைன்மரக் கிளைகளுக்குத் தாவின
நம்முடைய குயில்கள்

நம்மை ஆண்ட பெருமக்கள்
திரும்பத் திரும்ப நமக்குள்
அந்நியக் குருதியை ஓடவிட்டனர்

உலக வர்த்தகத்திற்கு
உள்ளூர் வீதிகளை குளங்களை
கொஞ்சம் அதிகமாக ஆட்களையும்
தாரை வார்த்தனர்

சிந்திப்பதற்கு நாம் வைத்திருந்த மூளையை
தங்கள் சேமிப்புக்கு உரியதாக
மாற்றினர்

உரத்துப் பேசுகிறவனை கோமாளியாகவும்
ஊமையாய் இருப்பவனை அறிவின்
தீவிர ஜீவியாகவும் கருதினர்

தேர்தல் நேரத்து இலவசங்களுக்காக
தேசத்தையும் இழக்கத் துணிந்தனர்

நர்சரிக் கூடங்களில்
நம்முடையப் பிள்ளைகளை பெயரறியாச்
செடியாக்கினர்

அன்பை நாம் இழந்தோம்
அவர்கள் வீடுகள் பளிங்குக் கற்களால்
பளபளத்தன

ஒன்றன் பின் ஒன்றாக நாம்
இழக்கத் தொடங்கினோம்
ஒவ்வொரு இழப்பிலிருந்தும் அவர்களுக்கு
ஏதாவது கிடைத்தது

இனியும் சொல்வோம்
இழப்பதற்கு நம்மிடம் எதுவுமில்லை
வெல்வதற்கோர் செம்மொழி உண்டு

Advertisements

4 பதில்கள் to “மீண்ட சொல்”

 1. சிறப்பான கவிதை.

 2. Karthick said

  Thamizhaiye marandhirundha ooliyargal indha MNC ugathil, avargailaiyum thamizh pathi pesa vaithadhadhu indha maanadu…
  endrume pulavargal thangalai madhipavargalai pottruvadhum pogazhvadhum eyalbu, adhu indhilum irundhadhil aachariyam illai…
  130 aaivu katturaigalai thamizhukku koduthadhu indha maanadu…
  Thamzhariya kuzhanthaigalukku thamizh perumaigalai unarthi irukiradhu indha maanadu…

  Indha maanadu vettri adaindhadharkku vazhthukkal, idhan bayanaaga innum pala nanmaigal thamizhukku nadakkum endru ungalai pondra nambikkai ennakkum ulladhu…

  Karthick

 3. நீங்களுமா?

 4. ஜெயகர் said

  சிறப்பான கவிதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: