யுகபாரதி

Archive for திசெம்பர், 2011

மெய்யான பொருள் கொள்க

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 12, 2011

ரண்டு தினங்களுக்கு முன்பு ராஜபாட்டை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.விழா முடிந்த ஓரிரு தினங்களுக்கு உள்ளாகவே சமூக வலைதளங்களின் மூலம் அப்பாடல்கள் சிலாகிக்கப்பட்டன.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரு ஆறுதலாக இருக்கும் தமிழ்த் திரையிசை பாடலுக்கு இத்தனை வரவேற்புக் கிட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.அப்பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடலாகப் பனியே பனிப்பூவே பாடலைச் சொல்லலாம்.அதில்,முள்வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம்போல் ஆனேனே,அன்பே உன் அன்பில் நானும் தனி நாடாகிக் போவேனே என்றொரு கண்ணி வருகிறது.அதுகுறித்து பலரும் நெகிழ்வோடு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

கிடைக்கும் சின்னச்சிறு சந்தர்ப்பத்திலும் எங்களை ஊடகங்களின் வாயிலாக நினைக்கிறீர்களே பதிவு செய்கிறீர்களே என்ற அவர்களின் நெகிழ்வு ஒருபுறம் இருந்தாலும் அவர்களை வேறாக நாம் நான் என்றுமே பார்ப்பதற்கில்லை.தனி நாடு கோரிக்கையை முன்வைத்த நிகழ்ந்த போரில் நமக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டு நம்முடைய சொந்தங்கள் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் அவலத்தை பதிவு செய்யும் பொருட்டே அவ்வரிகளை பதிவு செய்கிறேன்.அதை ஒரு காதல் பாடலில் எழுத அனுமதித்த இயக்குநர் சுசீந்தரனுக்கும் இசையமைப்பாளர்.யுவனுக்கும் என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.எனினும்,இவ்வரிகளை ஒருசிலர் தவறாகப் பொருள்கொண்டு காதல் பாடல் இப்படியெல்லாம் எங்களை குத்திக்காட்டுவதா என யுவனிடம் குறைப்பட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.வெல்வது உறுதி என்று பொங்குதமிழ் நிகழ்வுக்காகப் பாடல் எழுதி என் உணர்வை வெளிப்படுத்தினாலும் இம்மாதிரி வெகுஜன ரசனைக்கேற்ப சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை பதிவு செய்வதே சிறப்பு எனக் கருதுகிறேன்.இதைத் தவறுதலாகவோ தப்பான அர்த்தத்திலோ பொருள் கொண்டு என் உண்மையான உணர்வுக்கு களங்கம் கற்பிக்கத் தோழர்கள் முயல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.பூவெல்லாம் உன்வாசம் திரைப்படத்தில் காதல் வந்ததே பாடலில் கவிஞர்.வைரமுத்து இலங்கையில் நடக்கின்ற போரை நிறுத்து காதல் வந்ததே என்று எழுதியதைப் போலத்தான் இதுவும்.தனி நாடு என்னும் இலக்குக்காக முள்வேலியும் முடிவில்லா போரையும் தொடர வேண்டிய இச்சூழலில் பாடலின் அர்த்தத்தில் பிழை ஏற்படுத்தி தமிழ் உணர்வுகளின் இதயத்தை காயப்படுத்த வேண்டாமே.இப்பாடலை உச்சிமோர்ந்து வரவேற்கும் தோழர்களிடம் இப்பாடலுக்கான மெய்யான பொருளை கேட்டுத் தெளிவு பெறுங்கள்.கருத்துக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறப்படும் கருத்துக்கள் களங்கமுடையன என்பதை யாவரும் அறிவோம். 

Advertisements

Posted in அறிவிப்பு | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »