யுகபாரதி

Archive for the ‘திரைப்பாடல்’ Category

நான் மகான் அல்ல

Posted by யுகபாரதி மேல் ஜூலை 15, 2010

 

 
பல்லவி

தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்கு?
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்கு?

இதுவரையில் எதை கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நானிதை கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக?

சரணம்01

ஒருநாள் எனை
பிரிந்தாலும் வாடிய முகமே உனை
இனி எங்கு பார்ப்பது?

எனதாசைகள்
நிறைவேற ஏங்கிய மனமே உனை
எதை தந்து மீட்பது?

அழுதிட கூடாதென்று
அறிவுரை கூறுவாய்
அழுகையை நீயே தந்து
போனாயே

உறங்கிட நேரம் இன்றி
உழைத்திடும் கண்களில்
நிரந்தர தூக்கம் என்ன?
ஆண்தாயே
சரணம்02

உயிர்வாழ்வதே
எனக்காக என்றுநீ தினம்பேசுவாய்
அது என்ன ஆனது?

தலைமேல் சுமை
இருந்தாலும் புன்னகை தருமே இதழ்
அது எங்கு போனது?

நடந்திட பாதம் தந்து
வழிகளை காட்டினாய்
நடுவினில் முந்திச் சென்றால்
என் செய்வேன்?

எதுஎது இல்லை என்று
எனக்கென வாங்குவாய்
இறுதியில் நீயே இல்லை
என் சொல்வேன்?

இயக்கம் : சுசீந்திரன் இசை : யுவன்சங்கர்ராஜா குரல் : மதுபாலகிருஷ்ணன்

நான் மகான் அல்ல

திரைப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதபணிக்கப்பட்டேன்.இயக்குநர்.சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் ஆழமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர்.நல்ல நண்பர்.அவருக்கு எழுதும் போது எந்த சிரமமும் ஏற்படவில்லை.கதை சூழலைச் சொல்வதைக் காட்டிலும் படப்பதிவை செய்து பின் பாடலுக்கு மெட்டும் வார்த்தைகளையும் வாங்கினார்.செய்வன திருந்தச் செய்யும் அவருக்கு இப்படமும் வெற்றிப் படமாக வாழ்த்துவோம்.இதையடுத்து அவர் இயக்க இருப்பது,என் நண்பரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமான பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை கதையைத்தான்.ஒவ்வொன்றிலும் தன்னை வேறுபடுத்திக் காட்டுவதுதான் படைப்புக்கும் படைப்பாளனுக்கும்  தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லது.

 

 

Advertisements

Posted in திரைப்பாடல் | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 Comment »